“எல்லாரையும் கொன்னுடுவேன்”… ஸ்டூடியோவுக்குள் புகுந்து இயக்குனரை மிரட்டிய சிவக்குமார்… இவரா இப்படி!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கும் சூர்யா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு கார்மன்ட் ஃபேக்டரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். சூர்யாவுக்கு தான் ஒரு நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையே இல்லை. சொந்தமாக ஒரு கார்மென்ட் தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியமாக இருந்தது.
எனினும் இயக்குனர் வஸந்த், அவரை சினிமாத் துறைக்கு அழைத்து வந்தார். சரவணன் என்ற பெயரை சூர்யா என மாற்றி அவரை “நேருக்கு நேர்” திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். முதல் படம் என்பதால் சூர்யா நடிப்பதற்கே திணறினார். எனினும் எப்படியாவது தன்னால் முடிந்த சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என முயன்று அத்திரைப்படத்தில் நடித்தார்.
“நேருக்கு நேர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த தருணத்தில் சூர்யா டப்பிங் பேசவேண்டியாதாக இருந்தது. ஆனால் சூர்யா டப்பிங் பேசுவதற்கு மிகவும் திணறினாராம். அதன் பின் நடிகர் சீயான் விக்ரமை அழைத்து சூர்யா ரோலுக்கு டப்பிங் பேச வைக்கலாம் என வஸந்த் முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் பிரபு தேவா, அஜித் போன்றவர்களுக்கு விக்ரம் டப்பிங் பேசியிருந்தார்.
ஆனால் விக்ரமின் குரல் செட் ஆகவில்லையாம். மேலும் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனையும் அழைத்து டப்பிங் பேச வைத்திருக்கின்றனர். அவரது குரலும் செட் ஆகவில்லை. அதன் பின் பலரையும் அணுகி வந்தார்களாம்.
இந்த விஷயத்தை கேள்விபட்ட சிவக்குமார், ஒரு நாள் டப்பிங் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து வஸந்திடம் “என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சூர்யாதான் படத்துல நடிச்சிட்டானே. அவனையே டப்பிங் பேச வையுங்கள். படத்துலயே நடிக்கும்போது என் பையனால டப்பிங் பேச முடியாதா என்ன? ஒழுங்கா அவனையே டப்பிங் பேசவைங்க, இல்லைன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்” என மிரட்டிவிட்டு சென்றாராம். அதன் பிறகுதான் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி சூர்யாவுக்கு உறுதுணையாக நின்று டப்பிங் பேச வைத்தாராம்.
இதையும் படிங்க: ஒரே கதை… ஆனால் எழுதியதோ இரண்டு பேர்… கண்ணதாசனும் கலைஞரும் எழுதிய அட்டர் ஃப்ளாப் படங்கள்…