சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆறு மாதம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது . தமிழ்நாட்டில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என எந்த அளவு கொண்டாடி வருகிறோமோ அதைப்போல கர்நாடகாவில் சிவராஜ்குமாரை சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் .
அவர் மட்டும் அல்ல அவருடைய மொத்த குடும்பத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் நேசிக்கின்றனர். பழம்பெரும் நடிகரான ராஜ்குமார் கர்நாடகாவில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகராக இருந்தார். அவரைப் போலவே அவருக்குப் பிறகு புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார் ஆகிய இருவருமே சினிமாவில் தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்று தன் தந்தையைப் போல இவர்களும் ஒரு நல்ல மரியாதையில் இருந்து வந்தனர்.
இதையும் படிங்க: அதானே இதுவும் அதான்… சூர்யா44 படத்தின் லீக்கான டைட்டில்… நல்லாவா இருக்கு?
இதில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிவராஜ்குமார் பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ஜெய்லர் படத்தில் அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுசுடனும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ரவி அரசுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியானது. இப்போது வந்த தகவலின் படி சிவராஜ் குமார் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
அதனால் இயக்குனர் ரவியரசுவை தொலைபேசியில் அழைத்து வேண்டுமென்றால் தனுஷிடம் கதையை சொல்லுங்கள். நான் அவரிடம் பேசுகிறேன் .உங்கள் கதையில் அவர் நடிப்பார் என சிவராஜ்குமார் கூறினாராம் .அது மட்டுமல்ல ராஜ்குமார் மறைவிற்குப் பிறகு அவருடைய மொத்த சொத்தும் அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பிள்ளைகளுக்கு தான் போய் சேரும்.
இதையும் படிங்க: வந்த நியூஸ் எல்லாமே ஃபேக்!.. செம வொர்க் நடக்குது!. எஸ்.கே.25 பரபர அப்டேட்!…
ஆனால் சிவராஜ்குமார் என்னுடைய உழைப்பில் நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை செலவழித்துக் கொள்கிறேன். தன் அப்பாவால் வரும் சொத்தை முழுவதுமாக அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்து விடுகிறேன் என மொத்த சொத்தையும் அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிட்டாராம் சிவராஜ் குமார். இப்படி ஒரு நல்ல மனிதரை அதிலும் சினிமாவில் காண்பது மிகவும் அரிது என மெய்சிலிர்த்து வருகின்றனர். தனக்கு இப்படி ஒரு நோய் இருந்தும் தன்னை நம்பி வரும் இயக்குனர் பாதிப்படைய கூடாது என இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முன் வருகிறார் சிவராஜ் குமார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…