மாமனார் மாதிரி இருப்பார்னு பாத்தா இது வேற மாதிரி!.. சிவ்ராஜ்குமாருக்கு பேட் பீலிங்ஸ் கொடுத்த தனுஷ்!...
கன்னட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவ்ராஜ்குமார். கன்னட உலகின் முடி சூடா மன்னராக மெகா சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜ்குமாரின் மகன் தான் சிவ்ராஜ்குமார். இவரும் கன்னட சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்துள்ள நடிகராக திகழ்ந்து வருகிறார்.
கன்னட ரசிகர்களின் மொத்த அபிமானத்தையும் பெற்ற நடிகராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியுடன் ஜெய்லர் திரைப்படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றார் சிவ்ராஜ் குமார்.
இதையும் படிங்க : செஞ்சா குற்றம்… நடிச்சா தேசிய விருது… தெலுங்கு தேசம் வாங்குன ஒரு விருதுக்கே இத்தனை சர்ச்சையா?
இந்த நிலையில் கோடம்பாக்கத்தின் மிகவும் தேடப்படும் நடிகராகவும் மாறி இருக்கிறார். ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவின் போது கூட ரஜினியை பற்றி மிக பெருமையாக பேசியிருந்தார். சித்தப்பா என்றே தான் கூப்பிடுவேன் என்றும் ரஜினியை பற்றி கூறினார்.
இந்த நிலையில் ஜெய்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிவ்ராஜ்குமார். ஒரு பக்கம் மாமனார் ஒரு பக்கம் மருமகன் என பாரபட்சமில்லாமல் ரஜினி தனுஷ் இருவரின் படங்களிலும் நடித்த பெருமை பெற்றார்.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சில கசப்பான அனுபவங்களை சிவ்ராஜ்குமார் சந்தித்ததாக வெளிவட்டாரங்கள் தெரிவித்தனர். அதாவது படப்பிடிப்பிற்கு சிவ்ராஜ்குமார் சரியான நேரத்தில் வந்து விடுவாராம்.
இதையும் படிங்க : எதுக்குப்பா மெடிக்கல் டெஸ்ட்லாம் எடுக்குறீங்க? விஜயை வச்சு செய்யும் வெங்கட் பிரபு – ரகசிய பயணத்தில் ‘தளபதி 68’
ஆனால் அவரை வெகு நேரம் காத்திருக்க வைக்கிறாராம் தனுஷ். நாள் தோறும் தாமதமாகவே வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு நாள், நாள் முழுக்க காக்க வைத்து விட்டு தாமதமாக வந்த தனுஷு 15 நிமிடங்கள் மட்டும் நடித்தாராம்.
அதன் பின் எனக்கு மூடு சரியில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டாராம். இந்தப் பக்கம் சிவ்ராஜ்குமார் உட்கார்ந்திருக்க அவரும் எதுவும் சொல்லவில்லையாம். இருந்தாலும் பல மணி நேரம் தனுஷுக்காக காத்திருந்து இப்போது மூடு சரியில்லை என்று சொல்லி கிளம்புவது சிவ்ராஜ்குமாருக்கும் ஒரு விதத்தில் அவமானம்தான்.