Captain Miller Movie: தனுஷ் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
நீயா நானா போட்டியில் தனுஷும் சிவகார்த்திகேயனும் இருந்து வருகிறார்கள். ஒரு பக்கம் அயலான் திரைப்படமும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமாரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: நானே நடிகன்… என்னிடமே நடிப்பா… சிவாஜியிடம் மாட்டி கொண்ட பத்திரிக்கையாளர்… நடிகர் திலகம்னா சும்மாவா!..
ஆனால் அதற்கு பின்னனியில் ஒரு பெரிய காரணமே இருக்கிறது. தனுஷின் கெரியரிலேயே கேப்டன் மில்லர் திரைப்படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமாம். கிட்டத்தட்ட அந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 110 கோடியாம்.
மேலும் கன்னடாவில் அதிகளவு பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சிவ்ராஜ்குமாரை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம். எதிர்பார்த்த படியே கன்னட பிஸினஸ் 3.50 கோடி வரை போயிருக்கிறது.
இதையும் படிங்க: ராமமூர்த்திக்கும் பாதி கொடுங்க!… வாங்குன சம்பளத்தை பங்கு போட்ட எம்.எஸ்.வி… இப்படியும் ஒரு மனுஷனா!…
ஆனால் படம் வெளியான பிறகுதான் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே காத்திருந்ததாம். படத்தில் சிவ்ராஜ்குமாரின் போர்ஷன் மிகவும் குறைவாகவே இருந்ததினால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அதனால் எதிர்பார்த்த அளவு கன்னடாவில் படம் சரியாக போகவில்லையாம்.
அதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர் 2 கோடி வரைக்கும் பணத்தை தர மாட்டேன் என்று சொல்லி நிறுத்திவிட்டாராம். ஒருபக்கம் ரஜினி ஜெயிலரிலும் இன்னொரு பக்கம் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திலும் சிவ்ராஜ்குமாரை ஒரு பகடைக் காயாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இதையும் படிங்க: திரைப்படம் வேணாம்.. புகைப்படம் போதும்! போட்டோவை போட்டு இளசுகளை உசுப்பேத்திய மாளவிகா
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…