ரகுவரனுக்காக என்ன செஞ்சது இந்த கோலிவுட்? தக்க சமயத்தில் தோள் கொடுத்த சிவாண்ணா
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் டஃப் கொடுத்த வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன்.ஒரு ஒப்பற்ற நாயகனாகவும் வலம் வந்தார். ரகுவரன் போன்ற ஒரு மிரட்டலான வில்லன் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கிடைப்பது கஷ்டம்தான். தமிழ் சினிமாவால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர்தான் ரகுவரன்.
90களில் தனது அசத்தலான வில்லத்தனத்தால் சினிமா ரசிகர்களை மிரளவைத்தவர். கோலிவுட்டில் நம்பியாருக்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் உலுக்கி எடுத்தவர்.
இதையும் படிங்க : வீட்ட ரெண்டாக்குறதுதான் வேலையே! ரெண்டு வீடா இருந்தா? புதிய திருப்பங்களுடன் பிக்பாஸ் சீசன் 7 – லிஸ்ட் ரெடி
இவரின் உருவம் தமிழ் சினிமா வில்லன் என்ற வரையறைக்குள் அடங்காத ஒன்று. ஆனால் அப்படியும் தனது வில்லத்தனமான ரியாக்சனாலும் உடல்மொழியாலும் டெரர் காட்டியவர் ரகுவரன்.
ரஜினியின் ஆஸ்தான நடிகராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபகாலமாக ரகுவரனின் சகோதரர் மற்றும் சகோதரி அவரது குடும்பத்தார் ரகுவரனை பற்றியும் அவர் பயன்படுத்திய பொருள்களை பற்றியும் பேட்டிகளில் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு படப்பிடிப்பிற்காக வந்த கன்னட உலகின் மிக செல்வாக்கு மிக்க நடிகரான சிவ்ராஜ்குமாரை ரகுவரன் சகோதரர் சந்தித்து பேசினார். அப்போது ரகுவரனின் சகோதரர் என்று சொன்னதும் சிவ்ராஜ் குமார் ஷாக் ஆகிவிட்டார்.
அப்போது ரகுவரன் மிகவும் டஃப்ஃபான நடிகர் என்றும் அவருடன் நடிப்பது என்பது அவ்ளவு எளிதான காரியம் இல்லை என்றும் எங்கள் குடும்பத்துக்கும் ரகுவரனுக்கும் ஒரு இணக்கம் இருக்கிறது என்றும் அவரது சகோதரரிடம் சிவ்ராஜ் குமார் கூறினார்.
இதையும் படிங்க : ஆல் இன் அழகுராஜாவா மாஸ் காட்டப் போகும் வடிவேலு! ‘சந்திரமுகி 2’வில் இப்படி ஒரு திருப்பமா?
அதுமட்டுமில்லாமல் சிவ்ராஜ்குமார் தன் தொலைபேசி எண்ணை ரகுவரன் சகோதரரிடம் கொடுத்து எப்பொழுது என்னை தொடர்பு கொள்ளலாம். என் அடுத்த படத்தில் கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவே கொண்டாடிய ரகுவரன் குடும்பத்துக்கு கோலிவுட் என்ன செய்தது என்பதையும் யோசிக்க வேண்டும்.