இதுதான் என் கனவு!.. இது நடந்தா கல்யாணம் பண்ணிடுவேன்!.. எஸ்.ஜே.சூர்யா ஃபீலிங்!…

by சிவா |   ( Updated:2025-04-16 05:18:06  )
இதுதான் என் கனவு!.. இது நடந்தா கல்யாணம் பண்ணிடுவேன்!.. எஸ்.ஜே.சூர்யா ஃபீலிங்!…
X

இயக்குனர் வஸந்திடம் ஆசை படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படம் 80 சதவீதம் முடிந்த நிலையில் அப்படத்தை விட்டுவிட்டு லிவிங்ஸ்டன், ரம்பா நடித்த சுந்தர புருஷன் படத்தில் வேலை செய்யப்போனார். பாரதிராஜா கிழக்கு சீமையிலே படத்தை இயக்கியபோது ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு போய் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாராம்.

வஸந்திடம் மனக்கசப்பு ஏற்பட்டு நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிய அஜித் எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து ‘என் அடுத்த படத்திற்கு நீதான் இயக்குனர்’ என சொல்ல அப்படி உருவான படம்தான் வாலி. இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அந்த படம் வெற்றி பெற்றது.

ஆனால், தனக்குள் இருக்கும் நடிப்பு ஆசையை தீர்த்துக்கொள்ள அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களில் நடித்தார். அதில் இசை படம் தோல்வி. அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாற அதுவே அவருக்கு கை கொடுத்தது.

sj surya don
sj surya don

இப்போது தமிழ் சினிமா இயக்குனர்கள் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறிவிட்டார். ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்திலும் போலீஸ் அதிகாரியாக கலக்கி இருந்தார். மேலும் இவரின் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா ஸ்கொயர் போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்போது 56 வயது ஆகிவிட்டது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கேட்டால் சினிமாவில் நிலையான இடம் என எதுவுமில்லை. நாமளும் கஷ்டபட்டு நம்மை நம்பி வரும் பெண்ணும் கஷ்டப்படவேண்டுமா?.. அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என தத்துவம் சொல்வார்.

இந்நிலையில், நீயா நானா கோபிநாத் ஒரு நிகழ்ச்சியில் திருமணம் பற்றி அவரிடம் துருவி துருவி கேட்டதற்கு ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது. இந்தியாவின் எம்.ஜி.ஆர் ஆக வேண்டும். அது நடந்தால் திருமணம் செய்துகொள்வேன்’ என சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அளவுக்கு பிரபலம் ஆக வேண்டுமெனில் நடிகராக இருப்பது மட்டும் போதாது. மக்களை கவரும் வசீகரம், அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வர் பதவி மற்றும் வாரி கொடுக்கும் வள்ளல் என மக்களிடம் அவர் வாங்கிய பெயர் போன்ற நிறைய காரணங்கள் இருக்கிறது. இதுவெல்லாம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடக்குமா என்பது தெரியவில்லை.

அவர் சொல்வதை பார்க்கும்போது காலத்திற்கும் முரட்டு சிங்கிளாகவே அவர் இருப்பார் போல!…

Next Story