விஜய் பட வில்லனுக்காக மொட்டை போட்டுக்கொண்ட சோ!.. இது யாருக்காவது தெரியுமா?....
நடிகர் சோ என்றாலே அவரது சாதுரியமான பேச்சும், கலாட்டாவான நகைச்சுவையும் தான் நினைவுக்கு வரும். அவர் காமெடியன் மட்டுமல்ல. சினிமா விமர்சகர், பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர் என்று பன்முகத்திறன் கொண்டவர். ஆனால் அவரது இன்னொரு பக்கம் சுவாரசியமானது. அது என்னன்னு பார்க்கலாமா...
நடிகர் சோ குழந்தை மனம் படைத்தவர். அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் தான் இது.
ஒரு முறை நடிகர் முத்துராமன் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். 'உங்க வீட்டுப்பக்கத்துல இருக்காரே அவருக்கு இருதய நோய். அவருக்கு மருந்து கொடுக்கணும். உடனடியாக அவரது வீட்டுல இருந்து யாரையாவது அழையுங்கள்' என்றது. உடனே அவசரம் அவசரமாக முத்துராமன் பக்கத்து வீட்டுக்குச் சென்று 'உங்க வீட்டுல யாருக்கு இருதய நோய்?' என்று விசாரித்துள்ளார்.
அவர்கள் 'யாருக்கும் இல்லை' என்ற பின் பக்கத்து வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அவர்களும் அதையே சொல்லி இருக்கிறார்கள். அதன்பின்னும் ஒரு வீட்டில் விசாரிக்க அவர்களும் அதே பதிலைச் சொல்லி இருக்கிறார்கள். பின்னர் முத்துராமன் தொலைபேசியில் யாருக்குமே இருதய நோய் இல்லை என்று சொன்னாராம்.
உடனே கடகடவென சிரித்து விட்டு 'நான் தான் சோ பேசுறேன்'னு சொன்னாராம். இப்படி அவர் செய்த கலாட்டா அளவிட முடியாதது. ஒரு பக்கம் குழந்தை உள்ளம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் மிகப்பெரிய மனிதாபமானி. சோ வின் துக்ளக் இதழில் தான் இயக்குனர் மகேந்திரன் பணியாற்றி வந்தார்.
அங்கு அவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்வதாக சோ வேண்டிக்கொண்டாராம். அதே போல உடல் நிலை சரியானதும் போய் மொட்டையும் அடித்துக் கொண்டு வந்தாராம் சோ. அரசியல்வாதி, பத்திரிகையாளர் மட்டுமல்ல. மிகச்சிறந்த மனிதாபமானி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் மகேந்திரன் விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..