இந்த ரேஞ்சில போனா சூரி வேறலெவல்!.. ஆச்சர்யப்படும் திரையுலகம்!.. விஷயம் இதுதான்!..

 
இந்த ரேஞ்சில போனா சூரி வேறலெவல்!.. ஆச்சர்யப்படும் திரையுலகம்!.. விஷயம் இதுதான்!..
மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர்தான் சூரி. வாழ்க்கை ஓட்டுவதற்காக பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வந்தவர். அப்படியே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வருவார். சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா’ சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் பல படங்களிலும் நடிக்க துவங்கினார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்தா என எல்லோரின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தார். இந்த ரேஞ்சில போனா சூரி வேறலெவல்!.. ஆச்சர்யப்படும் திரையுலகம்!.. விஷயம் இதுதான்!.. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு செகண்ட் ஹீரோவை போலவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் படங்களில் நடித்தே அதிகம் பிரபலமானார். அந்த நிலையில்தான் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படம் வெற்றியை பெற்றது. எனவே, இப்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் கருடன் என்கிற படத்திலும் நடித்தார் சூர்யா. இந்த படத்தில் சூரிக்கு ஹீரோ வேடம்தான். இந்த ரேஞ்சில போனா சூரி வேறலெவல்!.. ஆச்சர்யப்படும் திரையுலகம்!.. விஷயம் இதுதான்!.. soori இந்த படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒருபக்கம் சூரி நடித்திருக்கும் கொட்டுக்காளி படம் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருகிறது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த படமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூரி அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களின் பற்றி சிலாகித்து பேசிய ஒரு தயாரிப்பாளர் ‘சூரி அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களின் கதையெல்லாமே அற்புதம். கண்டிப்பாக அந்த படங்கள் எல்லாமே ஹிட் அடிக்கும்’ என சொல்லி இருக்கிறார்.

From Around the web