Actor Soori: சினிமா மீதுள்ள மோகத்தால் பல கிராமங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து, கொண்டு வந்த காசையெல்லாம் இழந்து கடும் போராட்டங்களுக்கு நடுவில் ஜெயித்த சில பேர் உண்டு. தோற்ற பல பேர் உண்டு. நிரந்தரமற்ற ஒரு போலியான சொகுசான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்கள் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது. அந்த வகையில் நடிகர் சூரி மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின் காமெடி நடிகராக உயர்ந்து இப்போது ஹீரோவாக மாறி இருக்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பே காரணம்.
இந்த நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் சூரி பார்த்த வேலைகள் என்னென்ன? அவர் கடந்து வந்த பாதைகள் என்ன என்பதை பற்றிதான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். சினிமாவில் எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் சாதிக்க வேண்டும் என வருபவர்களுக்கு வாய்ப்புகள் எல்லாம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை/ அதில் சூரியும் ஒருவர்.
இதையும் படிங்க: சார்பட்டா நடிகரின் மனைவி இந்த நடிகையா? இரண்டு முறை விவாகரத்து..மூன்றாவதாக காதல் திருமணம்
அதனால் சென்னைக்கு வந்து விட்டோம். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் வரை வருமானத்திற்கு என்ன செய்வது என்பதற்காக சின்ன சின்ன வேலைகளை அங்கு செய்து கொண்டு வந்தார் சூரி. சினிமாவில் லைட் மேன் ஆக பணிபுரிந்து இருக்கிறாராம் சூரி. அதேபோல் கிளீனர்ம் ஆட்டோ டிரைவர்ம் பனியன் கம்பெனி, போஸ்டர் ஓட்டுவது, கல்யாண டெக்கரேஷன் போன்ற இந்த வேலைகளை எல்லாம் செய்து தன் பொழப்பை ஓட்டி இருக்கிறார் சூரி.
மேலும் வெள்ளித்திரை மட்டும் தன்னுடைய லட்சியம் அல்ல. நடிப்பதுதான் என்பதற்காக சின்னத்திரை என்றாலும் பரவாயில்லை என சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. அதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: முரளி காதல் கதையும் குஷி படமும் ஒன்னா? கல்யாணம் விஷயத்தினை அப்பாவிடமே மறைத்த அம்மா… அடடே!
அந்த படத்திற்கு பிறகு சங்கமம் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார். இப்படி ஆரம்ப காலங்களில் ஒரு காட்சி இரு காட்சி என நடித்து வந்திருக்கிறார் சூரி. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரிக்கு ஒரு பெரிய அடையாளம் தந்த படமாக அமைந்தது வெண்ணிலா கபடி குழு. அந்தப் படத்திலுமே அவருக்கு சொல்லும் படியான கேரக்டர் இல்லை என்றாலும் ஒரு சீனில் பரோட்டா சாப்பிடும் மாதிரியான ஒரு காட்சியில் நடித்து இன்றுவரை பரோட்டா சூரி என்றுதான் நாம் அவரை நினைவு கூர்ந்து வருகிறோம்.
அந்த ஒரு படம்தான். அவரை இந்த தமிழ் சினிமாவிற்கு யார் இவன் என்பதைப் போல் ஆச்சரியப்பட வைத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், அஜித், சூர்யா ,கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து தன்னுடைய நகைச்சுவையான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி ஒரு முன்னணி காமெடி நாயகனாக உயர்ந்தார் சூரி.
இதையும் படிங்க: உங்க வீட்டில் திருமணமா?… உடனே இங்க வாங்க!.. சிறகடிக்க ஆசை மீனா கொடுத்த ஷாப்பிங் டிப்ஸ்!
அவருக்குள்ளும் ஒரு ஹீரோயிசம் இருக்கிறது என்பதை வெற்றி மாறன் தான் முதலில் வெளிக்கொண்டு வந்தார். அந்தப் படம் தான் விடுதலை .எப்படி வெண்ணிலா கபடி குழு அவருக்கு ஒரு அடையாளம் தந்த படமாக அமைந்ததோ அதைப்போல விடுதலை திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இந்த படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் கதாநாயகன்.
அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சூரி. ஒரு காமெடி நடிகனுக்குள்ளும் இப்படி ஒரு நடிகன் இருக்கிறானா என்று ஆச்சரியப்பட வைத்தது. அவ்வளவுதான் சூரியன் ரூட்டே மாறிவிட்டது. இப்போது தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் சூரியாக இன்று மாறி இருக்கிறார். இருந்தாலும் அவருடைய அது எதார்த்தம் இன்னும் மாறவில்லை. ஹீரோவாகி விட்டோம் என்ற அகந்தை , தலைக்கணமே இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகி வருகிறார்.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…