இலவச உணவு கொடுப்பதை தடுக்கும் சூரியின் ஹோட்டல் ஊழியர்கள்!.. மதுரையில் பரபரப்பு!..

by சிவா |
இலவச உணவு கொடுப்பதை தடுக்கும் சூரியின் ஹோட்டல் ஊழியர்கள்!.. மதுரையில் பரபரப்பு!..
X

Soori hotel: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல வருடங்கள் கலக்கியவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி நடித்த பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அவரை பிரபலமாக்கியது. அதன்பின் பரோட்டா சூரி என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார்.

சிவகார்த்திகேயனின் படங்களில் அதிகம் நடித்தார் சூரி. குறிப்பாக ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: வாயக் கொடுத்து வம்படியா மாட்டிக்கிறது! விசாரணையை ராதிகா பக்கம் திருப்பிய கமிஷன்

ஆனால், திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த படமும் வெற்றியடையவே தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் கருடன் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கொட்டுக்காளி திரைப்படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. ஆனால், தியேட்டரில் ரசிகர்களை கவரவில்லை. விரைவில் விடுதலை 2 படம் வெளியாகவிருக்கிறது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் தொழிலை துவங்கினார் சூரி.

amman

#image_title

மதுரையில் சில இடங்களில் இந்த ஹோட்டலின் கிளைகள் செயல்பட்டுகிறது. மதுரை ராஜாஜி மருத்துவமனையின் உள்ளேயும் சூரி ஹோட்டலின் கிளை இருக்கிறது. ஒருபக்கம், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை என்கிற பெயரில் வாலிபர்கள் சிலர் அரசு மருத்துவமனையில் இலவச மதிய உணவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று உணவு கொடுக்க வந்த அவர்களை சூரியின் அம்மா ஹோட்டல் உணவக ஊழியர்கள் தடுத்து மக்களுக்கு இலவச உணவு கொடுக்கவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதுபற்றி சூரி விரைவில் விளக்கமளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story