என்னை காமெடியன்னு நினைச்சியா?!.. சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சூரி.. கருடன் வசூல் இதுதான்!..

சினிமா உலகில் யாருடைய படம் வசூலை பெறும் என சொல்லவே முடியாது. யார் யாரை விட அதிகமாக வசூல் செய்வார் என கணக்கிடவே முடியாது. ராமராஜன் என்கிற ஒரு நடிகர் சினிமாவுக்கு வந்தபோது அவரின் படங்கள் ரஜினி, கமல் படங்களை விட அதிக வசூல் செய்யும் என யாருக்கும் தெரியாது. ஆனால், அவரின் படங்கள் அதை செய்தது.
கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடும் என யாரும் கணிக்கவில்லை. அதேபோல்தான், ரஜினி, கமல் இருவரும் பீக்கில் இருந்தபோது மைக் மோகனின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. இவரின் பல படங்கள் 175 நாட்கள் ஓடி சாதனை செய்தது. சினிமா அப்படித்தான் ரசிகர்களுக்கு பிடித்தால் தூக்கி மேலே வைத்துவிடும்.
இதையும் படிங்க: அடிப்பார்.. உதைப்பார்! ஆனால் இதையும் தாண்டி பாலாவின் வேறொரு முகம் பற்றி தெரியுமா?
இப்போது நடிகர் சூரிக்கும் இது கிடைத்திருக்கிறது. திரைப்படங்களில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்து ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறியவர் சூரி. பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பரோட்டா சூரியாக மாறினர். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி செய்து வந்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்தார். அப்போதுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடிக்கும் வாய்புப் சூரிக்கு வந்தது. அப்படி வெளியான விடுதலை படம் நல்ல வசூலை பெற்றது.

soori
அதன்பின் விடுதலை 2 படமும் உருவாகி வருகிறது. ஒருபக்கம், கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார இயக்கத்தில் உருவான கருடன் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் சூரி. கடந்த 31ம் தேதி வெளியான இந்த படம் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் தமிழகத்தில் 14.35 கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆனால், கருடன் திரைப்படம் 4 நாட்களில் மட்டும் 18 கோடியை வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயனை சூரி தாண்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.