Cinema News
இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
வெண்னிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் சூரி. அதிலும் அந்த படத்தில் வரும் பாரோட்டா சாப்பிடும் காட்சி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. எனவே, ரசிகர்கள் அவரை பரோட்டா சூரி என அழைத்தனர். அதன்பின் பல படங்களிலும் காமெடி நடிகராக வந்த சூரி விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக மாறினார்.
அந்த படம் வெற்றியடைவே விடுதலை 2 படம் உருவாகி வருகிறது. மேலும், ஒருபக்கம் கதையின் நாயகனாக சூரி நடித்த திரைப்படம்தான் கருடன். இந்த படத்தில் நடிகர் சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அதோடு, மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த உன்னி முகுந்தனிடம் விசுவாசியாக இருக்கும் நபராக நடித்திருக்கிறார் சூரி. இப்போது இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி இருக்கிறது. மதுரையை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூரி அதிரடி சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
அதுவும் ரத்தம் தெறிக்க பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார் சூரி. சூரியை இதற்கு முன் இப்படி பார்த்தது இல்லை. பார்ப்பது சூரியா இல்லை சூர்யாவா என்கிற சந்தேகமே நமக்கு வருகிறது. அந்த ரேஞ்சுக்கு இறங்கி அடித்திருக்கிறார் சூரி, படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது தனது விஸ்வாசி சூரியை வைத்து ஒரு பெரிய சம்பவத்தை செய்கிறார் உன்னி முகுந்தன்.
அப்படி சூரி செய்யும் விஷயம் அவரை பிரச்சனையில் சிக்கவிடுகிறது. ஒருகட்டத்தில் முதலாளி தன்னை திட்டமிட்டே சிக்க வைத்திருக்கிறான் என்பதை புரிந்துகொண்டு அவனை சூரி பழி வாங்குவது போல காட்சிகள் வருகிறது. எப்படிப்பார்த்தாலும் சூரிக்கு இது வித்தியாசமான படமாகவே அமைந்திருக்கிறது.
கருடன் திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின் சூரி தொடர்ந்து ஆக்சன் காட்சிகளில் தொடர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருடன் பட டிரெய்லர் வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.