தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு படம்தான் ஒரு அடையாளத்தை தந்தது. அந்தப் படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து அதன் மூலம் மிகவும் பிரபலமானார். ஒரு கட்டத்தில் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, ரஜினி முருகன் போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து அதன் மூலம் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மாறினார். சொல்லப்போனால் எம்ஜிஆர் சிவாஜியின் படங்களுக்கு எப்படி நாகேஷின் காமெடி ஒரு சப்போர்ட்டாக இருக்குமோ அதே மாதிரியான ஒரு சப்போர்ட் தான் சிவகார்த்திகேயன் படங்களுக்கும் சூரியின் காமெடி அமைந்தது.
அதன் பிறகு அஜித், சூர்யா, கார்த்தி என பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார் சூரி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில்தான் கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த 31ஆம் தேதிதான் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்தப் படத்தின் சக்சஸ் விழாவும் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சூரி பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்தார். கருடன் படத்தின் பத்திரிக்கையாளர் ப்ரிவியூ ஷோ போடப்பட்டதாம். அப்போது பயில்வான் ரெங்கநாதனும் படத்தை பார்க்க சூரிக்கு ஒரே பயமாம். பயில்வான் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஒரு அச்சம் சூரிக்கு இருந்ததாம்.
வெளியே வந்ததும் சூரியை பார்த்த பயில்வான் படம் சூப்பர், நல்லா இருக்கு என சொன்னாராம் பயில்வான். அவ்வளவுதான். சூரிக்கு ஒரே சந்தோஷம். இனி என்ன? படத்தை பற்றி கவலை இல்லை. முதல் நாளை விட அடுத்தடுத்த நாள்கள் படத்தை பார்க்க ஆர்வமாக ரசிகர்கள் கூடி வந்தார்களாம். அண்ணன் சொன்ன வார்த்தைதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என பயில்வான் குறித்து சூரி கூறினார். இதை கேட்டுக் கொண்டிருந்த பயில்வான் சந்தோஷத்தில் வாயடைத்து நின்றார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…