ரொம்ப ஜாயின்ட் அடிக்காதீங்கடா!… சிரிப்புதான் வருது!. கோபப்பட்ட சூரி!…

#image_title
மதுரையை சேர்ந்த சூரி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், வயிற்றுப்பசியை கூட அவரால் போக்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, சுண்ணாம்பு அடிப்பது, பெயிண்ட் அடிப்பது, எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல வேலைகளை செய்தார். சினிமாவிலும் பல எடுபுடி வேலைகளை செய்திருக்கிறார்.
எப்படியோ பலரின் காலில் விழுந்து சினிமாவில் கும்பலில் நிற்கும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்த காமெடிக்கு பின் பரோட்டா சூரி என இவரை ரசிகர்கள் அழைத்தனர்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் சூரியை மேலும் பிரபலப்படுத்தியது. விஜய், அஜித், சூர்யா என பலரின் படங்களிலும் காமெடிகராக நடித்து வந்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றினார்.

அந்த படம் ஹிட் அடிக்கவே விடுதலை 2, கருடன், மாமன் மகள், மண்டாடி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அதோடு, சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். போதுமான அளவுக்கு பணம் சம்பாதித்திவிட்டேன்.. நல்ல கதைகளில் நடித்தால் போதும் என ஒரு மேடையில் பேசினார்.
ஒருபக்கம் சூரிக்கு உதவியதாக பலரும் கூறினார்கள். மறைந்த நடிகர் காமெடி நடிகர் போண்டாமணி கூட ‘என் வீட்டில் சூரியை தங்க வைத்தேன்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதேபோல், லொள்ளு சபா எஸ்தர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊடகத்தில் பேசியபோது ‘சூரி 2 நாட்கள் எல்லாம் சாப்பிடாமல் இருப்பான். நான் சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கிறேன்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசியுள்ள சூரி ‘என் கூட நிறைய பேர் பழகி இருக்காங்க. அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், என்னை பார்க்காதவங்க, பழகாதவங்க கூட ‘சூரி வருவான். அவனுக்கு நான் காசு அள்ளி கொடுப்பேன். சாப்பாடு வாங்கி கொடுப்பேன்’ என தற்பெருமையா சொல்லிக்கிட்ரு இருக்காங்க. அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருது. ஒருத்தன் கஷ்டப்பட்டு கீழ இருந்து மேலே வரும்போது எங்க வேணாலும் யாரு வேணாலும் ஜாயிண்ட் அடிக்கணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு’ என பேசியிருக்கிறார்.