சிக்ஸ் பேக் ஆன் தி வே!...உடம்பை தாறுமாறா ஏத்தியுள்ள நடிகர் சூரி!...புகைப்படங்கள் உள்ளே!...
பரோட்டா காமெடி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் சூரி. அந்த காமெடிக்கு பின் பரோட்டா சூரி எனவே அவருக்கு பேர் வந்தது. கிராமத்து கதை என்றாலே அப்படத்தில் காமெடிக்கு நிச்சயம் சூரி இருப்பார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த சூரிக்கு, வெற்றி மாறனின் விடுதலை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கும் மேல் நடந்து வருகிறது. இப்படத்திற்காக பல படங்களின் வாய்ப்பை சூரி இழந்துள்ளார்.
விடுதலை படத்தில் சூரி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். எனவே, உடலை சிக்கென வைத்திருப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ‘இன்றைய வலி நாளைய வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.