Actor Sri: ஸ்ரீயை கண்டுபிடிச்சாச்சு.. எப்படி இருக்காரு தெரியுமா? உண்மையை உடைத்த தோழி

sri_new
Actor Sri: நடிகர் ஸ்ரீயை பற்றி பல விஷயங்கள் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் ஸ்ரீயின் தோழி பல பேட்டிகளில் அவருக்காக பேசி வருகிறார். இப்போது கூட ஸ்ரீக்கு என்னாச்சு? எங்கு இருக்கிறார் என பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஸ்ரீ டெல்லியில் இருப்பதாகவும் தென் கொரியாவில் இருப்பதாகவும் சில செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே ஸ்ரீ ஹரியானாவில் உள்ள குருகிராமில் இருப்பதாக அவருடைய தோழி கூறியிருக்கிறார்.
குருகிராமிலும் அவர் இருக்கும் சரியான லொக்கேஷனையும் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அதை இப்போது சொல்ல முடியாது. ஏனெனில் இந்த விஷயம் தெரிந்தால் மறுபடியும் ஸ்ரீ யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவார். அந்தளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறார் ஸ்ரீ என அவருடைய தோழி கூறியிருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீக்கு ஹாலுசினேசன் என்ற வியாதி இருந்திருக்கிறது.
அப்படியென்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கும் வியாதிதான் ஹாலுசினேசன். அதுமட்டுமில்லாமல் அவர் காதில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஸ்ரீ அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாராம். அதுவும் தவறான் வழியில் தன்னை அந்த குரல் வழி நடத்துவதாகவும் சொல்லியிருக்கிறாராம். இப்படி ஒரு வியாதி அதோடு மன உளைச்சல் இதெல்லாம் சேர்த்துதான் ஸ்ரீயை இப்போது யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்திருக்கிறது.
மேலு சைசோஃப்ரனியா என்ற ஒரு வியாதியும் இருக்கிறதாம். சைசோஃப்ரனியா என்றால் சொசைட்டியுடன் ஒட்டாமல் தனியே இருப்பது. யாரையும் பார்க்காமல், யாருடனும் இருக்காமல் இருப்பது. ஆனால் ஸ்ரீ வேண்டுமென்றே தல அஜித் மாதிரி வெளியே வர மாட்டேன் என்று சொல்லவில்லை. அவனால் வெளியே வர முடியவில்லை. அதற்கு காரணம் இந்த சைசோஃப்ரனியாதான் என அவருடைய தோழி கூறியிருக்கிறார்.

மேலும் இரண்டு படங்களில் நடித்து பணம் வரவில்லை என்று போஸ்ட் ஒன்று போட்டிருந்தார் ஸ்ரீ. அதில் இறுகப்பற்று படத்தை பற்றி அவர் கூறவில்லை. வில் அம்பு படத்தில் நடித்ததற்கு தனக்கான சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். என்று தோழியின் மடியில் படுத்து அழுதிருக்கிறாராம். ஆனால் கூடிய சீக்கிரம் ஸ்ரீயை மீட்டு அவரை குணமடைய செய்வோம் என அவருடைய தோழி கூறியிருக்கிறார்.