மாநகரம் பட நடிகர் ‘ஸ்ரீ’-யா இது?!.. வெளியான ஷாக்கிங் போட்டோ!…

by சிவா |   ( Updated:2025-04-12 01:35:21  )
sri
X

ஸ்ரீராம் நடராஜன் என்பது இவரின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கமாக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அந்த படம் ஓடவில்லை என்றாலும் ஸ்ரீ-யின் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் படித்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் நடிக்க துவங்கினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம்தான் ஸ்ரீ சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம். இந்த படத்திலேயே அவரின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தது. அடுத்துதான் ஓநாயும் ஆட்டுக்குட்டி படத்தில் நடித்தார்.

அதன்பின் சோன் பப்படி, வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார். இதில், வில் அம்பு படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கி கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், 4வது நாளிலேயே தாக்குபிடிக்க முடியாமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 2023ம் வருடம் இவரின் நடிப்பில் இறுகப்பற்று என்கிற படம் வெளியானது. இதுதான் அவரின் கடைசிப்படம். அதன்பின் ஸ்ரீ-யின் நடிப்பில் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், ஸ்ரீ எலும்பும் தோலுமாக போஸ் கொடுத்து எடுத்த செல்பி புகைப்பம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இவருக்கு என்னாச்சி?’ என பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ ‘ பட வாய்ப்பு இல்லாததால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கலாம். அவர் அதிலிருந்து மீண்டு வரவேண்டும்’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள். இதுபற்றி ஸ்ரீ விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை என்னவென தெரியவரும்.

Next Story