ஒரு பாட்டுக்காக இப்படி உயிரையே பணயம் வைக்குறதா?? கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து உடல் கருகி வெளிவந்த ஸ்ரீகாந்த்…
2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், த்ரிஷா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மனசெல்லாம்”. இத்திரைப்படத்தை சந்தோஷ் என்பவர் இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக “கையில் தீபம் ஏந்தி வந்தோம்”. “நீ தூங்கும் நேரத்தில்” போன்ற பாடல்கள் இப்போதும் மிகப் பிரபலமான பாடல்களாக திகழ்கிறது.
இந்த நிலையில் ‘நீ தூங்கும் நேரத்தில்” என்ற பாடலின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஸ்ரீகாந்த் சுற்றி எரிந்துகொண்டிருக்கும் தீயிற்கு நடுவே நின்று பாடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக ஸ்ரீகாந்த்தை ஒரு உயரமான இடத்தில் நிற்கவைத்துவிட்டு அவர் ஏறிச் சென்ற ஏணியை எடுத்துவிட்டனர். அவரை சுற்றி ஒரு தீ வளையம் ஏற்படுத்துவதற்காக ஒரு கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த கெமிக்கலை படக்குழுவினர் கொஞ்சம் அதிகமாக ஊற்றிவிட்டனராம்.
ஆதலால் தீ அவரது உயரத்தை தாண்டியும் கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. ஆனாலும் எரியும் நெருப்பின் அனலை தாங்கிக்கொண்டு அந்த காட்சி முடியும்வரை அதில் நடித்திக்கிறார். நடித்து முடித்தவுடன் அனல் தாங்கமுடியாமல் கத்தியிருக்கிறார்.
அதன் பின் படக்குழுவினர் ஏணியை போட தனது முகத்தை இரண்டு கைகளால் மூடிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை கடந்து ஏணிப்படியில் இறங்கி வந்தாராம். அப்போதுதான் படக்குழுவினர் ஸ்ரீகாந்த்தின் கைகள் நெருப்பில் கருகி இருந்ததை பார்த்தார்களாம். அதன் பின் அவரை உடனே ஊட்டியில் இருந்த மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல் நாளே ஃபைட் சீன் வைத்த இயக்குனர்… அஜித்தை இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் படுக்க வைத்த பகீர் சம்பவம்…
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இரவு முழுவதும் தூங்கக்கூடாது எனவும், தூங்கினால் ஜன்னி வந்துவிடும் எனவும் டாக்டர்கள் கூற, அப்போது உதவி நடன இயக்குனராக இருந்த பிக் பாஸ் சாந்தி ஸ்ரீகாந்த்தின் உள்ளங்காலை விடிய விடிய தேய்த்து தேய்த்துக்கொண்டே இருந்தாராம். அதன் பின் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தாராம் ஸ்ரீகாந்த்.