பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்.. திரையுலகினர் இரங்கல்....
X
கருப்பு வெள்ளை மற்றும் கலரில் பல திரைப்படங்களில் அவர் நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார். வயதான பின்பும் பாரதி உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். தற்போது அவருக்கு 82 வயது ஆகிறது.
கதாநாயகன், குணச்சித்திர வேடம், வில்லன் என பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story