---Advertisement---

சுயநலமா மட்டும் பார்க்காதீங்க- பெட்ரோல் வதந்தி குறித்த ஸ்ரீமன் வீடியோ

Published on: March 12, 2026
sriman
---Advertisement---

தமிழ் திரையுலகில் குணச்சித்திர மர்றும் நலைச்சுவை வேடங்களில் கலகி வருபவ்ர் நடிகர் ஸ்ரீமன். சுமார் 30 ஆண்டுகளாக இவரது திரைப்பயணம் தொடர்கிறது.இவரது தந்தை பிரகாஷ் ரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டராக இருந்தவர். புதிய மன்னர்கள் படத்தில் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்துவிஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்க்ளில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரான், அமெரிக்க போர் காரணமாக உலமெங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட போவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அனைத்து பெட்ரோல் பங்கிலும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஸ்ரீமன் வீடொயோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் அதில்,

பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன் அரைமணி நேரம் காத்திருந்த பின்னரே பெட்ரோல் போட முடிந்தது. இத்தனைக்கும் பைக் மற்றும் காருக்கு என்று தனித்தனியே வரிசை எல்லாம் வைத்திருந்தார்கள். நாளை முதல் எதுவுமே கிடைக்காது, இன்றே எல்லாம் நிரப்பி வைத்து விட வேண்டும் என்பது போல மக்கள் கடன் வாங்கிக் கொண்டு வந்தெல்லாம் பெட்ரோல் நிரப்பினார்கள்.

நான் பெட்ரோல் அடித்த கொஞ்ச நேரத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்று போர்ட் வைத்துவிட்டார்கள். இதனால் பலருக்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை. நாம் ஏன் பகிர்ந்து வாழக் கூடாது. நம்மிடம் வசதி உள்ளது என்பதற்காக நாம் இப்படி பெட்ரோல் அதிகம் அடிக்க வேண்டுமா? சில பேரால் இரண்டு லிட்டர் பெட்ரோல் தான் போட முடியும், அவர்களும் வெளியே செல்ல வேண்டும் அல்லவா? அவர்களுக்கும் குடும்பம் உள்ளது தானே? எந்த பிரச்னை வந்தாலும் சுயநலத்தை மட்டும் பார்க்க வேண்டாம், பொது நலமாக இருக்க பாருங்கள்

என்னாலும் எனது காருக்கு ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பமுடியும். ஆனால் நான் பாதி தான் போட்டேன். பகிர்ந்தளித்து வாழ்ந்தால் தான் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் நமக்குத் தேவை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.