நான் சொல்லித்தான் வந்தாரு.. எஸ்பிபி இறப்பால் குற்ற உணர்ச்சியில் பிரபல நடிகர்

spb
SPB: தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். கொரோனா தொற்று இவருக்கு உறுதி செய்யப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சில நாட்களிலேயே அவருடைய உடல் நிலை மோசமடைந்ததால் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் இந்த உலகை விட்டு மறைந்தார் எஸ் பி பி. அவருடைய இந்த இறப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பாக இருந்தது.
இந்திய சினிமாவின் பாடும் நிலா என்று அழைக்கப்பட்டவர் எஸ் பி பாலசுப்ரமணியம். முதன்முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாகத்தான் பாடகராக அறிமுகமானார். அதன் பிறகு கன்னட மொழியிலும் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தான் தமிழில் பாட ஆரம்பித்தார் எஸ் பி பி. இவருடைய குரலில் முதன் முதலில் வெளியான பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றிருந்த ஆயிரம் நிலவே வா என்ற பாடல் தான். இந்தப் பாடல் இவருடைய பெயரை தமிழ்நாடு எங்கும் உச்சரிக்க காரணமாக அமைந்தது.
இவருடைய தாய்மொழி தெலுங்கு என்றாலும் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் எஸ் பி பி. இதுவரை 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் வாங்கிய விருதுகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. பாடகர் என்பதையும் தாண்டி சிறந்த டப்பிங் கலைஞர், இசை அமைப்பாளர் ,சிறந்த துணை நடிகர் என பல பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியவர் எஸ் பி பி. திரைப்படப் பாடல்களோடு ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள் தொலைக்காட்சி தொடரில் இருக்கும் அறிமுக பாடல் என தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எஸ் பி பி .
இந்த நிலையில் இவருடைய மரணம் குறித்து பிரபல நடிகர் அவருடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் .பல தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் சுபலேகா சுதாகர். இவர் எஸ் பி பி யின் மைத்துனர். இவர் கூறும் பொழுது எஸ்பிபி தன்னுடைய மைத்துனர் என்றாலும் அவரை சார் என்று தான் கூப்பிடுவேன். கோவிட் சமயத்தில் ஒரு தொலைக்காட்சி தொடருக்கான ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்தது.

அப்போது எஸ்பிபி பாதுகாப்பு எப்படி இருக்கு என கேட்டார். எங்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் வந்தால் இன்னும் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும் என்று நான் கூறினேன். அதை நம்பி வந்தார். அந்த நம்பிக்கை வீணாகி போய்விட்டது. இந்த உலகத்தை விட்டு நான் போகிற வரைக்கும் இந்த குற்ற உணர்ச்சி என்னை விட்டு நீங்காது என சுபலேகா சுதாகர் விகடன் பேட்டியில் கூறி இருக்கிறார்.