ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி; ரசிகர் குடும்பத்தினர் திடீர் ‘ஷாக்’

Published on: June 1, 2023
---Advertisement---

நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 50 பரோட்டோ சாப்பிடும் போட்டி என்ற காமெடி காட்சி மூலம் நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலான படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்து இன்னும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் சேர்ந்து நடித்த படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இவர்களுக்குள் ஒத்துப்போன கெமிஸ்ட்ரி அந்த காமெடி காட்சிகளை இன்னும் வலுப்படுத்தியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படங்கள், நல்ல வெற்றியை கொடுத்தது.

 வடிவேலு, சந்தானம் போன்றவர்களை தொடர்ந்து, சூரியும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார், அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை பாகம் 1ல் கதாநாயனாக நடித்து, அந்த படம் வெற்றி பெற்றது. குமரேசன் என்ற கேரக்டரில் போலீஸ் வேடத்தில் மிக தன்மையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் சூரி இடம்பிடித்துள்ளார். அடுத்து விடுதலை பாகம் 2 படம் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களில் அந்த படமும் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில், கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி, ஹீரோவாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு வந்திருக்கிறார் சூரி. அப்போது, தனது ரசிகர் ஒருவரின் தாயாருக்கு உடல் நலம் இல்லை என கேள்விப்பட்ட சூரி, ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். திடீரென சூரியை பார்த்த ரசிகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரசிகரின் உடல் நலமில்லாத தாயாரை நேரில் சந்தித்த சூரி ஆறுதலும், தைரியமும் கூறிவிட்டு, மீண்டும் ஆட்டோவில் பயணித்து தன் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். இதுகுறித்து சூரியிடம் சிலர் கேட்ட போது, ‘ஒவ்வொரு ரசிகரின் அம்மாவும், என் அம்மாவை போல தான். அதனால்தான், அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்துவிட்டு வந்தேன்’ என நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார் சூரி.

இப்போது சூரி ஆட்டோவில் பயணித்த காட்சியும், ரசிகரின் வீட்டுக்கு சென்றதும் வீடியோவாக, புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.