தமிழ்நாட்டிலேயே நான் மட்டும்தான் அதை செஞ்சுருக்கேன்.. – பொது மக்களுக்காக சூரி செய்த உதவி..!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்சமயம் பெரும் இயக்குனர் இயக்கத்தில் படம் நடித்து வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த பரோட்டா காமெடி மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகர் சூரி.
அதன் பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார். ரஜினி உட்பட பல பெரிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் சூரி. தொடர்ந்து நடிப்பு திறமையை காட்டி வந்த சூரி தற்சமயம் ஒரு வழியாக விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் சூரியின் குடும்பம் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது உடன் பிறந்தவர்கள் டீ கடை வைத்து நடத்தி வந்தனர். அந்த சமயத்தில்தான் சினிமாவில் வாய்ப்புகள் தேடி சூரி சினிமாவிற்கு வந்தார். சூரி சினிமாவில் வளர்ந்து வந்த சமயத்தில் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் சூரி.
எனவே வளர்ந்து வந்த பிறகு சூரி அவரது சொந்த ஊரில் உணவகங்களை திறந்தார். முடிந்த அளவு நல்ல விலையில் நல்ல சாப்பாடு வழங்குவதே தனது குறிக்கோள் என சூரி கூறியுள்ளார். ஒருமுறை சூரியின் அம்மா அவரது சொந்தக்காரர் ஒருவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு நல்லப்படியான உணவே கிடைக்கவில்லை. இதை பார்த்த சூரியின் தாயார் சூரிக்கு போன் செய்து ”இந்த மருத்துவமனையில் யாருக்கும் நல்ல சாப்பாடே கிடைக்கவில்லை. இதற்கு ஏதாவது ஏற்பாடு பண்ணு.” என கூறியுள்ளார் . இதை கேட்ட சூரி பலரிடம் பேசி அந்த அரசு மருத்துவமனையில் உணவகத்தை திறந்துள்ளார்.
இதுக்குறித்து சூரி கூறும்போது “பொதுவாக உணவகங்களை ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில்தான் உணவகங்கள் திறப்பார்கள். ஆனால் முதன் முதலாக மருத்துவமனையில் உணவகம் திறந்தது நான்தான்” என கூறியுள்ளார்.