Connect with us

ரஜினி மாதிரி மாறிட்டாரே சூர்யா!.. கடுப்பாகி பிரபாஸிடம் போன இயக்குனர்!…

rajini

latest news

ரஜினி மாதிரி மாறிட்டாரே சூர்யா!.. கடுப்பாகி பிரபாஸிடம் போன இயக்குனர்!…

நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாகவே ஒரு விஷயத்தை பின்பற்றி வருகிறார்.. அதாவது ஒரு இளம் இயக்குனரின் படம் ஹிட் அடித்து நல்ல விமர்சனத்தை பெற்றால் உடனே அந்த படத்தை பார்ப்பார் ரஜினி. அவருக்கு பிடித்திருந்தால் அந்த இயக்குனரை நேரில் வரவழைத்து படத்தை பற்றி பாராட்டி பேசுவார். அதுமட்டுமில்லாமல் ‘எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ என்பார்.. அட ரஜினியே சொல்லிவிட்டாரே என அந்த இயக்குனர் ஆர்வமாகி 6 மாதங்கள் அமர்ந்து ஒரு கதை எழுதி ரஜினியிடம் சொல்லுவார். ஆனால், அது டேக் ஆப் ஆகாது. நீங்க போய் வேற ஒரு படம் பண்ணிட்டு வாங்க என சொல்லி அனுப்பிவிடுவார் ரஜினி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங்கு பெரியசாமி, பார்க்கிங் ராம்குமார் பாலகிருஷ்ணன், டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ஆர்.ஜே.பாலாஜி என பலருக்கும் இது நடந்திருக்கிறது.
தற்போது இந்த விஷயத்தை சூர்யாவும் பின்பற்ற துவங்கிவிட்டார்.

RDX என்கிற மலையாள படத்தை இயக்கிய நஹாஸ் ஹித்யாத்தை அழைத்து எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என சூர்யா சொல்ல அவரும் சில மாதங்கள் அமர்ந்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்.. ஆனால் அதன்பின் அவரால் சூர்யாவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள்..

போன வருடம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற Eko படத்தின் இயக்குனர் டிஞ்சித் அய்யதனை அழைத்து உங்கள் படம் செமையாக இருந்தது.. எனக்கு ஒரு கதை எழுதுங்கள் என சூர்யா சொல்ல, அதை நம்பி அவரும் சில மாதங்கள் நேரம் எடுத்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்.. ஆனால் சூர்யா ஆர்வம் காட்டவில்லை. அதன் பின் ஒரு தயாரிப்பு நிறுவனம் அந்த இயக்குனரை அழைத்து அதே கதையை கேட்டு மிரண்டு போய் பிரபாஸிடம் அந்த கதையை சொல்ல வைத்து ஓகே செய்திருக்கிறார்கள்.

சூர்யாவை விடவும் மார்க்கெட்டில் பல மடங்கு மேலே இருப்பவர் பிரபாஸ்.. பேன் இண்டியா நடிகர்.. எனவே சூர்யா வேண்டாம் என்று சொன்னது அந்த இயக்குனருக்கு நல்ல வாய்ப்புதான் என்கிறது சினிமா உலகம்..

To Top