6 ரூபாய் இல்லாம சூர்யா பட்ட கஷ்டம்!.. அம்மா மேல இவ்வளவு பாசம் உள்ளவரா!..
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. இவரின் நிஜப்பெயர் சரவணன். சினிமாவில் நடிப்பதில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தவர் இவர். ஆனால், தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை விடவில்லை. வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் விஜயோடு சண்டை போடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. ஏனெனில் அது எல்லாமே சாக்லேட் பாய் வேஷம்தான். பாலாவின் இயக்கத்தில் நடித்த நந்தா திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதன்பின் காக்க காக்க, பிதாமகன், வாரணம் ஆயிரம் சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களால் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இதையும் படிங்க: மே மாதம் களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள்!.. டேக் ஆப் ஆகுமா தமிழ் சினிமா?!..
அதன்பின் சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்க துவங்கினார். இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். சூர்யா சரவணனாக இருந்த போது டிகிரி முடித்த பின் ஒரு கம்பெனியில் சென்று வேலை கேட்டிருக்கிறார்.
ஒரு மாதம் இழுத்தடித்த பின்னரே அவருக்கு அந்த வேலையை கொடுத்திருக்கிறார்கள். முதல் சம்பளமாக 1200 ரூபாய் வாங்கி இருக்கிறார் சூர்யா. அதில் அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கடைக்கு போயிருக்கிறார். அவருக்கு பிடித்த மாதிரி ஒரு புடவையை தேர்ந்தெடுத்தார்.
இதையும் படிங்க: தமிழில் அதிக வசூல் செய்த டாப் 20 படங்கள்… நீங்க நினைச்சது இருக்கான்னு பாருங்க!.
அதன் விலை 1256/- என இருந்தது. தன்னிடம் இருந்த எல்லா சில்லறைகளையும் பொறுக்கி போட்டதில் 1250 வந்திருக்கிறது. அதன்பின் கடை ஓனரிடம் சென்று 6 ரூபாய் குறைத்துக்கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார். அவரும் குறைத்துக்கொள்ள அந்த புடவையை அம்மாவிடம் சென்று கொடுத்து சந்தோஷப்பட்டிருக்கிறார் சூர்யா.
சூர்யா அம்மா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் அம்மா பிள்ளை என சிவக்குமாரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். எப்போது எங்கு வெளியூர் அல்லது வெளிநாடு போனாலும் அம்மாவிடம் மட்டும் தினமும் பேசிவிடுவாராம் சூர்யா. அவரின் 2 குழந்தைகளும் அவரின் அம்மாவிடமே வளர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.