மும்பையில் சூர்யா வாங்கியுள்ள டூப்லெக்ஸ் பிளாட்!.. ஆத்தாடி இத்தனை கோடியா?!...

நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகர் சூர்யா. இவரின் தம்பி கார்த்தியும் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார் சூர்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

suriya

suriya

சிறு வயது முதலே சென்னை தி. நகரில் உள்ள ஒரு பங்களாவில்தான் சூர்யா வசித்து வந்தார். அந்த வீடு ஒரு தெருவில் துவங்கி அடுத்த தெருவில் முடியும் அளவுக்கு பெரிய வீடாகும். ஜோதிகா மும்பையை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு பின் மும்பையில் பிளாட் வாங்கினார் சூர்யா. அடிக்கடி மும்பை சென்று வந்தார்.

suriya

suriya

ஆனால், தற்போது மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டாராம். தேவைப்பட்டால் மட்டும் சென்னை வருகிறார். மேலும், ரூ.68 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட டூப்லெக்ஸ் பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். 9 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த வீடு 16வது மாடியில் அமைந்துள்ளதாம். தற்போது இந்த வீட்டில்தான் சூர்யா வசித்து வருகிறார். இந்த வீட்டில் தனியாக தோட்டம் மற்றும் கார்கள் நிறுத்தும் கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாம்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொஞ்சம் மூடி மிச்சமெல்லாம் காட்டுறியே!.. வெட்கப்படாம காட்டும் ஸ்ரேயா…

 

Related Articles

Next Story