Cinema News
எவ்வளவு அவமானம்.. அசிங்கம்.. கண்ணீர் விட்டு அழுதேன்!.. பருத்திவீரன் பற்றி பேசும் சூர்யா…
Paruthiveeran: நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா ஏற்கனவே சினிமாவில் நடிகனாகிவிட்ட நிலையில் அவரின் இளையமகன் கார்த்தி பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இயக்குனர் அமீர் அப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை பார்த்த எல்லோரும் மனதிலும் எழுந்த கேள்வி ‘முதல் படத்திலேயே கார்த்தியை அமீர் எப்படி இப்படி நடிக்க வைத்தார்’ என்பதுதான்.
இந்த படம் அப்படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அதோடு, பல மேடைகளிலும் இப்படம் விருது வாங்கியது. ஆனால், இப்படத்தில் அமீருக்கு நேர்ந்த பிரச்சனைதான் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் அப்படத்திலிருந்து விலகி விட அமீரே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் 1.65 கோடி கடன் வாங்கி அப்படத்தை முடித்தார். ஆனால், படம் முடிந்து நன்றாக உருவானதால் தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரை அழைத்து பேசி அப்படத்தை ஞானவேல் ராஜா பெயருக்கு மாற்றினார்கள். அதோடு, அவர் செலவு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு.
ஆனால், அவர் பொய் கணக்கு எழுதி திருடினார் என்கிற ரீதியில் ஞானவேல் ராஜா பேசியது இயக்குனர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் அமீருக்கு ஆதவராக பேச ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை சிவக்குமாரோ, கார்த்தியோ, சூர்யாவோ எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் பலரும் இதுபற்றி விமர்சித்தும் இதுவரை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது போல சூர்யா பேசியிருப்பதுதான் மீண்டும் பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாவே இல்லையா!.. என்ன கமல் சார்.. பிரதீப் ஆண்டனி சொல்றது நிஜமா?..
பல வருஷம் கழிச்சி பருத்தி வீரன் படத்தை பார்த்து கார்த்தியை கட்டிப்பிடித்து அழுதேன். கார்த்தி ரொம்ப வசதியா, சொகுசா வளர்ந்த பையன். ஆனால், ஷுட்டிங் ஸ்பாட்ல அத்தனை அவமானங்கள், அசிங்கங்களை சமாளிச்சு 2 வருஷம் பல்லை கடித்துக்கொண்டு வலியும், வேதனையுமா வேலை பார்த்திருக்கான். அவனை கட்டிபிடிச்சு அழுவதை தவிர வேற எதுவும் என்னால வேற எதுவும் பண்ண முடியல’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அமீர் தான் அடைந்த அவமானம், நஷ்டம் பற்றியெல்லாம் பேசியபோது அதை பற்றி பேசாத சூர்யா, தனது தம்பி அவமானத்தை சந்தித்துக்கொண்டே பருத்திவீரன் படத்தில் நடித்தார் என்பதை எதை வைத்து சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.
இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!