வில்லனா நடிக்க மாட்டேன்!.. வளர்த்துவிட்ட இயக்குனரிடமே சொன்ன சூர்யா!..

by சிவா |
suriya
X

suriya

திரையுலகில் சில நடிகர்களை சில இயக்குனர்கள் தூக்கிவிடுவார்கள். ஆனால், தூக்கிவிட்டவர்களே கேட்டாலும் அவர்களின் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை சில நடிகர்களுக்கு ஏற்படும். இது யாருக்கும் அதிகம் நடந்திருக்கிறதோ இல்லையோ நடிகர் சூர்யாவுக்கு இது அதிகம் நடந்துள்ளது.

நேருக்கு நேர் திரைப்படத்தில் இருந்து அஜித் விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சூர்யா. வசந்த இயக்கிய அப்படத்தில் சூர்யாவை அழகாக காட்டியது மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த். முதல் படம் என்பதால் தடுமாறிய சூர்யாவுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.

kv anand

மேலும், அயன் திரைப்படம் மூலம் சூர்யாவுக்கு பெரிய ஹிட் படத்தை கொடுத்து அவரின் மார்கெட் மதிப்பை அதிகரித்தவர். அதன்பின் மாற்றான், காப்பன் ஆகிய படங்களிலும் சூர்யாவை வைத்தே இயக்கினார். சூர்யாவின் முதல் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய காப்பான் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.

கே.வி.ஆனந்த் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கனா கண்டேன். இப்படத்தில் வில்லனாக நடிக்க அவர் முதலில் அணுகியது சூர்யாவிடம்தான். அப்போது பிதாமகன், பேரழகன் சில படங்களில் நடித்து சூர்யா ஹீரோவாக மாறியிருந்தார். எனவே, வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின்னர் அந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்திவிராஜை கே.வி.ஆனந்த் நடிக்க வைத்தார். இதில் பிரித்திவிராஜை பார்த்த பலரும் அவர் சூர்யாவை போலவே இருப்பதாக தெரிவித்தனர்.

kv anand

கே.வி. ஆனந்திடம் மட்டுமல்ல. தன்னை வைத்து காக்க காக்க ஹிட் படத்தை கொடுத்த கவுதம் மேனன் உருவாக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க மறுத்தார் சூர்யா. அதேபோல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த ஹரியின் கதையிலும் நடிக்க மறுத்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எப்ப்பா சாமி என்னால முடியல.. மூச்சு வாங்கும் அனுஷ்கா.. வாய்ப்பிற்காக இப்படி ஒரு அக்ரிமென்ட்டா?..

Next Story