நடிகர் சூர்யா சமீப காலமாக சிறந்த இயக்குனர்களை தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.. கருப்பு படத்திற்கு பின் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதான் & சன்ஸ் படத்தில் நடித்தார்/ அந்த படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியாகிய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே கண்டிப்பாக இப்படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்தவுடனேயே மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போனார் சூர்யா. அந்த படத்தில் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்கு பின் இந்த படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்..
இந்நிலையில்தான், அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் அஜித்தை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியவர்.. விஜயின் கடைசி படமான ஜனநாயகனை இயக்கியிருக்கிறார். எனவே அவரோடு கூட்டணி அமைத்திருக்கிறார் சூர்யா
.
உண்மையில், தனுஷின் அடுத்த படத்தைத்தான் ஹெச்.வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.. எனவேதான் ஹெச்.வினோத் சூர்யாவுடன் கை கோர்த்திருக்கிறார் என்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…