Cinema History
டெரர் இயக்குனர் படத்தில் நடிகையை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட சூர்யா!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா!…
நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிப்பதில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தவர்தான் சூர்யா. துணிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தவர்.
நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலகியதால் இந்த படத்தில் ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்கிறேன் என சவால் விட்டார் வஸந்த். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் யாரும் அமையவில்லை. அப்போதுதான் சிவக்குமாருக்கு சரவணன் என்கிற மகன் இருப்பதை கேள்விப்பட்டு அவரின் வீட்டுக்கு போனார்.
இதையும் படிங்க: டெடிகேஷனா இருக்க இப்படியா? விஜய் சேதுபதியின் கேரவனுக்குள் போய் பார்த்ததும் ஷாக் ஆன அபிராமி
அப்போது சரவணனும் அங்கிருக்க ‘உனக்கு நடிக்க விருப்பமிருக்கா?’ என கேட்க சரவணனோ ‘இல்லை’ என சொல்லிவிட்டார். ஆனால், வஸந்த் தொடர்ந்து வற்புறுத்த ‘நாம் நடித்தால் என்ன?’ எனகிற ஆசை சரவணனுக்கு வந்தது. அப்படித்தான் நேருக்கு நேர் படத்தில் நடிக்க வந்தார் சரவணன். அவரின் பெயரை சூர்யா என மாற்றினார் வஸந்த்.
மணிரத்னம் தயாரிப்பு, இயக்குனர் வஸந்த், ஜோடி சிம்ரன், ஒருபக்கம் விஜய் என்பதால் சூர்யாவோ மிரட்சியில் இருந்திருக்கிறார். அவருக்கும் நடிப்பும் வரவில்லை. இதனால் கோபப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் வஸந்திடம் திட்டுமும் வாங்கி பல நாட்கள் அழுதும் இருக்கிறார். அந்த படத்தில் வேலை செய்த மறைந்த நடிகர் மாரிமுத்து ஊடகம் ஒன்றில் பேசிய போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
புதுமுக நடிகரை தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்கிற விஷயம் தெரியாதவர் வஸந்த். எனவே, சூர்யா தடுமாறினார். சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வஸந்த். சூர்யாவால் அது முடியவில்லை. தயங்கி தயங்கி நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பு என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு ஓரளவுக்கு நடிக்க துவங்கினார்’ என சொன்னார்.
துவக்கத்தில் சில படங்களில் நடிப்பில் முதிர்ச்சி ஏற்படவில்லை என்றாலும் மௌனம் பேசியதே, நந்தா, காக்க காக்க, பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் தன்னை மெருகேற்றி ஒரு நல்ல நடிகராக மாறினார் சூர்யா. இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.