கங்குவாக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா!.. அப்ப வேற படம் வராம இருக்கணும்!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இவரின் படங்கள் தியேட்டரில் வெளியாவதில்லை. இவர் கடைசியாக தியேட்டரில் எப்போது ஹிட் கொடுத்தார் என்பது அவரின் ரசிகர்களுக்கே மறந்து போயிருக்கும்.
ஏனெனில் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் நேரிடையாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால், தியேட்டர் அதிபர்கள் ‘இனிமேல் சூர்யா படங்களை தியேட்டரில் வெளியிடமாட்டோம்’ என கோபம் காட்டினார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானதால் தியேட்டரில் வெளியாக எந்த பிரச்சனையும் வரவில்லை.
இதையும் படிங்க: கமல் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்! அசால்டா நடிச்சு பேர் வாங்கிய சீரியல் நடிகர்
ஆனால், அப்படி வெளியான அந்த படம் தியேட்டரில் ஓடவில்லை. ஏனெனில், கதை, திரைக்கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அப்படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னமும் சூர்யாவின் அடுத்த படம் வெளியாகவில்லை. அதற்கு காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படம்தான்.
சூர்யா நடித்துள்ள இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்களும், டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில், மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கங்குவா படத்தின் முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சூர்யாவே அறிவித்தார்.
இந்நிலையில், கங்குவா படத்தை வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியிடலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம். அக்டோபரில் தீபாவளி வந்தாலும் விடாமுயற்சி மற்றும் அமரன் போன்ற படங்கள் வரிசையில் இருப்பதால் கங்குவா படம் நவம்பருக்கு தள்ளி போய்விட்டது என சொல்கிறார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.