ராஜமவுலி படத்தை மிஸ் பண்ண சூர்யா!.. எல்லாம் போச்சி!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..

தெலுங்கில் சாதாரண படங்களை எடுத்து வந்த ராஜமவுலி ‘மஹதீரா’ படத்தின் மூலம் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டியிருந்தார். இந்த படத்தில்தான் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அறிமுகமானார். அறிமுகமே இப்படி ஒரு அசத்தலான ஆக்‌ஷன் படம் எந்த ஹீரோவுக்கும் கிடைக்காது.

இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ‘ஈ’ படம் மூலம் ஆச்சர்யப்படுத்தினார் ராஜமவுலி. இறந்து போன ஹீரோ ஒரு ஈயின் உடலில் ஆவியாக வந்து வில்லனை பழிவாங்கும் கதை. கேட்பதற்கு விட்டாலாச்சார்யா படம் போல் இருந்தாலும் கிராபிக்ஸிலும், சுவாரஸ்யமான திரைக்கதையிலும் அசத்தி இருந்தார்.

இதையும் படிங்க: கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி… போட்றா வெடிய!

தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின், அவர் இயக்கிய படம்தான் பாகுபலி மற்றும் பாகுபலி 2. பேன் இண்டியா படமாக வெளியான இந்த படங்கள் ராஜமவுலியை இந்தியாவில் முக்கிய இயக்குனராக மாற்றிவிட்டது. அதன்பின் அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படமும் அசத்தலான வசூலை பெற்றது.

இந்த படத்தில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இந்த படமும் பேன் இண்டியா படமாக வெளியாகி பல நூறு கோடி வசூலை பெற்றது. எனவே, இவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்களே ஆசைப்படுகிறார்கள்.

mahadheera

#image_title

இப்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ராஜமவுலி ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் சூர்யா மிஸ் செய்த செய்தி வெளியே தெரிய வந்திருக்கிறது. ராஜமவுலி கலந்துகொண்ட ஒரு விழா ஆந்திராவில் நடந்தது. அந்த விழாவில் சூர்யாவும் கலந்து கொண்டார். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது இது வீடியோவாக வெளிவந்திருக்கிறது.

அந்த மேடையில் பேசும் சூர்யா ‘சார் உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். அதற்காக வருத்தப்படுகிறேன். எல்லோரும் தங்களின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய தவறை செய்வார்கள். நானும் அப்படி ஒரு தவறை செய்துவிட்டேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அது ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை’ என சூர்யா பேசியிருக்கிறார். அனேகமாக அது ராம்சரண் அறிமுகமான மஹதீரா படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அட பாக்கவே பயங்கரமா இருக்கே… 1000 கோடி கன்பர்மா? லீக்கான கூலி படக்காட்சி!..

Related Articles
Next Story
Share it