கார்த்திக்கு நான் அண்ணன் இல்ல.. அப்பா!.. சர்தார் 2 விழாவில் கண்கலங்கி பேசிய சூர்யா..

X
கார்த்திக்கு நான் அண்ணன் இல்ல.. அப்பா!.. சர்தார் 2 விழாவில் கண்கலங்கி பேசிய சூர்யா..

நடிகர் சிவக்குமாருக்கு இரண்டு மகன்கள்.. மூத்த மகன் சூர்யா.. இளைய மகன் கார்த்தி.. சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த பிறகுதான் அவரின் தம்பி கார்த்தி பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமானார்.. ஒரு பக்கம் சூர்யா சிங்கமாக உருபினால் ஒரு பக்கம் சிறுத்தையாக வந்தார் கார்த்தி..

இருவரும், தனித்தனி ஸ்டைலில் படங்களில் நடித்து வருகிறார்கள். கார்த்தி தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்தான், இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கார்த்தி கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த விழாவில் கார்த்தியின் சகோதரர் சூர்யாவும் கலந்து கொண்டார்..

அந்த விழாவில் கொஞ்சம் எமோஷனலாக பேசிய சூர்யா ‘கார்த்தியை பொருத்தவரை நான் அவனின் அப்பா என்கிற மனநிலைக்கு வந்து விட்டேன்.. எனவே அப்பா என்கிற பாசம் வந்து விடும்.. அண்ணனாக பார்ப்பதை விட இது எனக்கு பிடித்திருக்கிறது.. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் நான் அவனை அப்படித்தான் பார்க்கிறேன்..

எங்களுக்குள்ளே போட்டியோ பொறாமையோ எதுவும் கிடையாது.. அவன் வழி தனி.. சில நேரம் சிலர் என்னிடம் வந்து என்னைப் பற்றி கேட்காமல் கார்த்திகை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்று விடுவார்கள். அது அவனின் வளர்ச்சி.. அதைப்பார்த்து எனக்கு சந்தோசம்தான்’ என ஃபீலிங்கோடு பேசியிருக்கிறார்.