அஜித் மட்டும்தான் போட்டோ போடுவாரா!.. நாங்களும் போடுவோம்!.. வைரலாகும் சூர்யா புகைப்படம்...

by சிவா |
suriya
X

Ganguva: கங்குவா படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு ஃப்ரி ஆகிவிட்டார் சூர்யா. அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதன்பின் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் என லைன் அப் இருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் சூர்யா. ஏனெனில் இது பல வருடங்களுக்கு முன் நடக்கும் ஒரு பீரியட் கதை என சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியான பின் சிறுத்தை சிவாவின் இமேஜே மாறும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..

அதோடு, சூர்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, பாதி தியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தனது கீரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சூர்யா தனது மனைவி ஜோதிகாவை அழைத்துக்கொண்டு பின்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இப்போது அங்கே பனிப்பொழிவு என்பதால் அதை இருவரும் என்ஜாய் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், பனியில் முகத்தை முழுவதும் மூடி கண்களை மட்டும் காட்டி சூர்யா எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அசர் பைசான் நாட்டில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில்தான், தற்போது சூர்யாவின் புகைப்படங்கள் வெளிவர துவங்கி இருக்கிறது.

suriya

Next Story