நடிகர் சிவக்குமாரின் வாரிசாக தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தில் முதல் முதலில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சாக்லேட் பாயாக மட்டுமே நடித்தார். அமீரின் மௌனம் பேசியதே, பாலாவின் நந்தா, பிதாமகன், கவுதம் மேனனின் காக்க காக்கா ஆகிய படங்கள் சூர்யாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
‘அட சூர்யா நன்றாக நடிக்கிறாரே’ என்கிற எண்ணம் ரசிகர்களுக்கும் வந்தது. அந்த படங்களுக்கு பின் சூர்யாவை அவர்கள் ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டார்கள் அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சூர்யா. குறிப்பாக ஹரியின் இயக்கத்தில் அவர் நடித்த சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்கள் அவரை பி,சி செண்டர்களிலும் கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா. அவரின் சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் கவனம் பெற்றன. தற்போது அவர் நடித்து வரும் படங்களும் அவரின் கெரியரில் முக்கியமான படங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சூர்யா ‘என் முதல் படமான நேருக்கு நேர் சூட்டிங்கின் போது எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் அழவேண்டும்.. ஆனால் எனக்கு அழுகையே வரவில்லை.. இயக்குனர் வசந்த் சார் முன்னாடி ரொம்ப அவமானமாக இருந்தது.. ‘நமக்கு இது செட் ஆகாது அப்பா பெயரை கெடுத்து விடுவோமோ’ என்று பயந்து பலமுறை அழுதிருக்கிறேன்.. அந்த தோல்விதான் என்னை வைராக்கியமாக வளர்த்தது’ என்று பேசியிருக்கிறார்.



