ஹீரோ சாருக்கு நன்றி... தம்பி கார்த்திக்கு நன்றி சொன்ன சூர்யா...

by சிவா |
ஹீரோ சாருக்கு நன்றி... தம்பி கார்த்திக்கு நன்றி சொன்ன சூர்யா...
X

நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லமால் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் பசங்க 2, சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக வெளிவந்தது.

தற்போது முத்தையா இயக்கத்தில் தனது தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தையும் அவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படம் மூலமாகத்தான் அவர் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வந்தது.

viruman

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை கார்த்தி டிவிட்டரில் பகிர்ந்து ‘முத்தையா சரியாக திட்டமிட்டு படத்தை முடித்துள்ளார். அதிதி சங்கர் நீங்கள் இயல்பாக நடிக்கிறீர்கள். உங்களுக்கு சிறந்த பயணம் இருக்கிறது.. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இருப்பது மகிழ்ச்சி.. தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி.. ’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ‘ஹீரோ சாருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

viruman

Next Story