Cinema History
தவறான நட்பால் உயிரிழந்த சுருளிராஜன்!.. எம்.ஜி.ஆரால் கூட காப்பாற்ற முடியாமல் போன சோகம்..
தமிழ் திரையுலக வரலாற்றில் நகைச்சுவை நடிகர்களுக்கான இடத்தில் கண்டிப்பாக சுருளிராஜனுக்கு ஒரு இடம் உண்டு. மதுரையை சேர்ந்த இவர் சினிமாவில் வருவதற்கு முன் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் இவர். வறுமையில் வாடிய சுருளிராஜன் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு மதுரையில் சில நாடகங்களில் கூட நடித்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடி போராடினார். கூட்டத்தில் ஒருவராக நிற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். காதல் படுத்தும் பாடு என்கிற படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..
அதன்பின், தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார். எம்.ஆர்.ராதா போல தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் இவர். சந்திரபாபுவை முதன்முறை நேரில் பார்த்தபோது அவரின் காலில் விழுந்த சுருளிராஜன் பின்னாளில் சந்திரபாபு வாய்ப்பின்றி வறுமையில் வாடியபோது தினமும் அவருக்கு சாப்பாடு அனுப்பிய கதையும் நடந்தது.
சுருளிராஜனுக்கு மதுப்பழக்கம் உண்டு. பலர் சொல்லியும் அந்த பழக்கத்தை அவர் விடவில்லை. அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. அப்போதுதான், அவரின் நண்பர் ஒருவர் ‘சரக்கு கசப்பாக இருக்கிறது. இனிப்பாக இருக்க இளநீர் கலந்து குடியுங்கள்’ என சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: சுருளிராஜன் வாங்கிய முதல் 100 ரூபாய் சம்பளம்!.. அட மனுஷன் இப்படியெல்லாமா செய்வாரு!..
‘எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இளநீர் கலந்தால் சரக்கரை அதிகரித்துவிடும்’ என சுருளிராஜன் சொல்ல ‘அதெல்லாம் இல்லை. நீங்கள் குடியுங்கள்’ என சொல்ல சுருளிராஜனும் இளநீர் கலந்து குடித்தார். பல நாட்கள் இந்த பழக்கம் தொடர்ந்தது. இதன் காரணமாக அவரின் உடலில் சர்க்கரை அளவு தாறுமாறாக அதிகரித்தது. படுத்த படுக்கையானார்.
சுருளி ராஜனை குணப்படுத்த அமெரிக்காவில் இருந்தெல்லாம் மருந்து வரவழைத்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆனாலும், சுருளிராஜனை குணப்படுத்த முடியவில்லை. 1980ம் வருடம் தனது 42 வயதிலேயே சுருளிராஜன் இறந்துபோனார். சினிமாவில் வந்த வேகத்திலேயே அவரது வாழ்க்கையும் முடிந்துபோனது.
இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 70ஸ் 80ஸை கலக்கிய சுருளிராஜன் காமெடிகள்