Categories: latest news

கங்குவாவ எப்படியாச்சும் காப்பாத்து சாமி!.. சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!…

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. அதிக சத்தம், படத்தின் கதை சரியாக புரியவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் சூர்யாவின் உழைப்பை சிறுத்தை சிவா வீணடித்துவிட்டார் என்று ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சனங்கள் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இதையும் படிங்க: AR Rahman: மனைவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்கள்!.. லீக் ஆன தகவல்!…

சத்தம் அதிகமாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சில மாற்றங்களையும் செய்தார்கள் படக்குழுவினர். அதன்படி முதலில் வரும் 20 நிமிடத்தில் 12 நிமிட காட்சிகளை வெட்டி விட்டனர். மேலும் சத்தத்தை குறைத்தும் இருக்கிறார்கள். மாற்றம் செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் மீண்டும் பிரஷாக படத்தை படக்குழுவினர் திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இருப்பினும் படம் வெளியான முதலே தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் இந்த திரைப்படம் மீண்டு எழுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. இதற்கிடையில் திரையுலகத்தை சேர்ந்த பலரும் இந்த திரைப்படத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

kanguva

சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா கங்குவா படத்திற்கு திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்க்காமல் நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பரப்பி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இப்படி படம் வெளியானது முதலே சமூக வலைதள பக்கங்களில் கங்குவா தொடர்பான பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நடிகர் சூர்யாவும் கங்குவா திரைப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இருவரும் ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஆலயத்தில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

திடீரென்று இவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்ததற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை கங்குவா திரைப்படம் சந்தித்த காரணத்தால் அதனை சரி செய்ய மனம் உருகி சாமியிடம் வேண்டுவதற்கு வந்திருக்கிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் படக்குழுவினர் நிச்சயம் கங்குவா 2 உருவாகும் என்று கூறியிருந்த நிலையில் அந்தப் படத்தை எடுப்பதற்கு முன்பு சாமி தரிசனம் செய்வதற்கு வந்தார்களா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago