ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே! சூர்யா குடும்பம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

Published on: December 19, 2023
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமாவிற்கும் இவருக்கும் இடையே இடைவெளி அதிகம். அந்தளவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாதவராகத்தான் இருந்திருக்கிறார். அதன் பிறகு நேருக்கு  நேர் என்றப் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சூர்யா.

அப்போது  கூட இவருக்கு நடிக்கவே தெரியவில்லை, நடனமும் ஆட வரவில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதிலும் தேசிய விருது நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

இதையும் படிங்க: காஜி ரசிகர்களுக்கு நல்ல விருந்து!.. தூக்கலான கிளாமரில் சொக்க வைக்கும் மாளவிகா!…

அதற்கு முக்கிய காரணம் அவரது அயராது முயற்சியும் கடின உழைப்புமே காரணமாகும். அதுமட்டுமில்லாமல் அவருடைய அப்பாவான சிவக்குமார் மீதும் இன்று வரை கோலிவுட்டில் ஒரு தனி மரியாதையே இருந்து வருகிறது.  உன்னதமான மனிதர் என்றும் சிறந்த சிந்தனையாளர் என்ற ஒரு நல்ல பெயரை காலங்காலமாக தக்க வைத்துக் கொண்டு வருகிறார்

ஆனால் சமீபகாலமாக  நடந்த அமீர் – ஞானவேல் ராஜா பிரச்சினை காரணமாக சிவக்குமாரையும் சேர்த்து ஒட்டுமொத்த குடும்பத்தின் பெயரும் சமூக வலைதளங்களில் அடிபட்டது. இதோடு இன்னொரு பிரச்சினையும் சிவக்குமார் குடும்பத்தின் மீது திரும்பியிருக்கிறது.

இதையும் படிங்க: வாடிவாசலை விட முடியாத சூர்யா.. அமீரை விட முடியாத வெற்றிமாறன்.. என்னப்பா நடக்குது..!

சூர்யாவுக்கு ஒரு வலது கையாக இருந்தவர் அவரது  மேலாளரான தங்கதுரை. அவர் கண்ணசைத்தால் மட்டுமே சூர்யா தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளிவரும். அந்தளவுக்கு ஒரு பாசப்பிணைப்பாக இருந்தவர்தான் தங்கதுரை.

ஏன் கார்த்தி மற்றும் ஜோதிகாவிற்கும் தங்கதுரைதான்  மேலாளராம். இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் தங்கதுரையை விலக்கி விட்டதாம். அவர் மேலாளராக இல்லையாம். சூர்யாவின் நண்பர் ஒருவரைத்தான் இப்போது புதியதாக மேலாளராக நியமித்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: என்னிடம் விஜயகாந்த் சொன்னதை எந்த நடிகரும் சொல்லமாட்டார்!.. உருகும் ஆனந்தராஜ்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.