என்னதான்டா ஈசியா அடிச்சிடுறீங்க!.. சூர்யாவை புலம்ப விடும் முன்னணி நடிகர்கள்!…

#image_title
சூர்யாவுக்கு இது போதாத காலம் போல. சிவக்குமாரின் மகன். அழகாக இருக்கின்றார். ஆண் மகனுக்கான லட்சணம் பொருந்திய ஒரு நடிகர் என இவருக்கு பெண்கள் ரசிகையும் நிறைய இருக்கிறார்கள். சூர்யாவை போல ஒரு கணவர் வேண்டும் என ஆசைப்படும் பெண்களும் இருக்கிறார்கள். நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்து வருகிறார்.
சூர்யாவுக்கு சிகரெட், மது உள்ளிட்ட எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. சினிமாவில் இப்படி இருக்கும் நடிகர்கள் மிகவும் குறைவு. கடந்த சில வருடங்களாக சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் நடித்து வருகிறார். அல்லது இது வெற்றி பெறும் என அவர் கணிப்பதாக தவறாக முடிகிறது. சிங்கம் 2வுக்கு பின் சூர்யாவால் ஒரு சூப்பர் ஹிட்டை கொடுக்கமுடியவில்லை.
புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்ததால் பாஜகவை ஆதரிப்பவர்களின் கோபத்திற்கு ஆளானார். கோவில்களுக்கு செய்யும் செலவை அரசு பள்ளிகளுக்கு செய்து அதை சுத்தமாக வைத்திருக்கலாம் என ஜோதிகா சொன்னதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, இப்போதுவரை சூர்யா - ஜோதிகா மீது அவர்கள் வன்மத்தை கக்கி வருகிறார்கள்.

சூர்யாவின் கங்குவா படம் வெளியானபோது மொத்த வன்மத்தையும் அவர்கள் கக்கினார்கள். சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு டிவிட்டரில் விஜய் ரசிகர் ஒருவருக்கு நக்கலாக பதில் சொல்ல அன்று முதல் இப்போது வரை விஜய் ரசிகர்களும் சூர்யா மீது வன்மதை கக்கி வருகிறார்கள். கங்குவா படம் வெளியானபோது அவர்களும் வன்மத்தை கக்கினார்கள்.
ஒருபக்கம் சூர்யா படங்கள் ரிலீஸாகும் முன்பும், பின்பும் தொடர்ந்து சில சிக்கல்களும் வருகிறது. கங்குவா பட ரிலீஸ் தேதியை அறிவித்தபோது ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவித்தார்கள். சிறுத்தை சிவா ரஜினியிடம் கேட்டும் அந்த தேதியை மாற்ற ரஜினி ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, கங்குவா ரிலீஸ் தேதியை மாற்றினார்கள்.
இப்போது கடந்த 1ம் தேதி ரெட்ரோ படம் வெளியானது. அந்த படத்தோடு சின்ன பட்ஜெட் படமான டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளியானது. ஆனால், ரெட்ரோவை விட டூரிஸ்ட் பேமிலி படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ரெட்ரோவை விட டூரிஸ்ட் பேமிலி படம் அதிக வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில், ரெட்ரோ படத்தின் வசூலும் குறைந்துவிட்டது. சிலர் இப்படம் பிளாப் எனவும் சொல்கிறார்கள்.
அடுத்து சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்த தேதியில் மாரி செல்வராஜின் பைசன் படம் வெளியாவதால் சூர்யாவின் பட ரிலீஸ் தள்ளிபோவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி எல்லா நடிகர்களாலும் சூர்யா சிக்கலை சந்தித்து வருகிறார்.