சூர்யாவை விட்டு சூரரைப்போற்று படத்தை கொடுத்தவர் சுதாகொங்கரா. எனவே சூர்யாவிற்கு நெருக்கமான நண்பராக மாறினார். இவர் மணிரத்னத்திடம் சினிமா கற்றவர். சுதாகொங்கரா வெற்றிக்கு பின் 1960களில் தமிழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஒரு கதையை எழுதினார் சுதாகொங்கரா. அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக புறநானூறு என்கிற தலைப்பில் படம் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்டது. ஆனால் சில நாட்களில் அந்த படம் டிராப் ஆனது.

சூர்யா பாலிவுட்டில் கால்பதிக்க ஆசைப்படுவதால் ஹிந்திக்கு எதிரான கதை கொண்ட படத்தில் நடித்தால் பாலிவுட்டில் தனக்கு ஆதரவு கிடைக்காது என கருதியே சூர்யா அதிலிருந்து விலகியதாக அப்போது செய்திகள் வெளியானது. அதன்பின் அந்த படத்தை சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர்களை வைத்து பராசக்தி என்கிற தலைப்பில் படத்தை இயக்கி முடித்துவிட்டார். சுதாகொங்கரா. இந்த படம் 2026 ஜனவரி 10ம் தேதி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பேட்டி கொடுத்த சுதாகொங்கரா சூர்யா விலகியது பற்றி பேசியபோது ‘எனக்கே ஏன் படம் டிராப் என தெரியாது. அதேநேரம், தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அது கொரோனா காலகட்டம் என்பதால் சூர்யாவால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை இருந்தது. அது கூட முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இடைவெளி விட்டுவிட்டு படம்மெடுத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும். எனவேதான் இந்த படத்தை தயாரிப்பதிலிருந்தும், நடிப்பதிலிருந்தும் சூர்யா விலகியிருக்கலாம்’ என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில்தான், தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. புறநானூறு படம் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஃப்ரி புரடெக்ஷன் பணிகளுக்காக சூர்யா 10 கோடி வரை செலவு செய்தாராம். ஆனால் அது பராசக்தியாக மாறியபோது சூர்யாவுக்கு 4 கோடி வரை மட்டுமே திருப்பி கொடுத்திருக்கிறார்கள். சுதாகொங்கரா படம் என்பதால் ‘பரவாயில்லை.. அதைக் கேட்க வேண்டாம்.. NOC கொடுத்துவிடுங்கள்’ என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாராம் சூர்யா.
