நீங்கலாம் மனுசன்தான!.. எங்கள பாத்தா எப்படி இருக்கு?!.. மாரி செல்வராஜை திட்டும் நடிகர்!...

by சிவா |
mari
X

#image_title

Mari selvaraj: சினிமா இயக்குனர்களுக்கு ஒரு பிரச்சனை உண்டு. அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து படங்களை எடுத்தால் அவர்கள் மீது முத்திரை குத்தி விடுவார்கள். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் மீது ஏற்கனவே இவர்கள் சாதிய படம் எடுக்கிறார்கள் என்கிற முத்திரை உண்டு.

இயக்குனர் மாரி செல்வராஜ் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். எனவே, அவரின் சமூகம் காலம் காலமாக சந்தித்து வரும் பிரச்சனைகளை பற்றி தனது படங்களில் பேசி வருகிறார். இவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

mari selvaraj

#image_title

அதேபோல், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை, தென் தமிழகங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல்ரீதியாக பெரிய பதவியில் இருந்தாலும் மற்ற சாதியினர் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என தெளிவாக காட்டியிருந்தார். இப்போது வெளியாகியுள்ள வாழை படமும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒருபக்கம், பா.ரஞ்சித் தனது படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே தொடர்ந்து நடிக்க வைக்கிறார் என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருக்கிறது. அவரும் தனது படங்களில் ஏற்றத்தாழ்வுகள் பற்றியே அதிகம் பேசுகிறார். இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஊடகம் ஒன்றில் பேசியதாவது:

telephone raj

#image_title

மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது படங்களில் அவரின் ஊர்காரர்களை மட்டுமே நடிக்க வைக்கிறார். நீ மனிசன்தான!.. நாங்களெல்லாம் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள். எங்களுக்கெல்லாம் வேலை இல்லை. சினிமாவிலிருந்துதான வந்திருக்கீங்க!.. இப்படி 4 கேவலமான இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இயக்குனர் முத்தையாவும் அவரின் படங்களில் அவரின் ஊர்காரார்களை வைத்து படமெடுக்கிறார். இன்னும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சாதியோ அந்த சாதிக்காரர்களை மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். நடிகர் சங்கத்தில் இருக்கும் நாங்கள் ஓட்டு போட மட்டும்தானா?.. நீங்கள் இப்படி சுலபமாக மற்றவர்களை உள்ளே நுழைந்து விடுகிறீர்கள்’ என பொங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு வந்த புது சிக்கல்… என்ன சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர்?

Next Story