Cinema News
இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல!.. சிவகார்த்திகேயன் பற்றி நெகிழும் தாடி பாலாஜி!..
Sivakarthikeyan: தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களில் பல படங்களிலும் நடித்தவர் தாடி பாலாஜி. விவேக், வடிவேலு என பலருடனும் காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய், அஜித் உள்ளிட்ட பலரின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். கடந்த பல வருடங்களாகவே விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் ஜட்களில் ஒருவராக இவர் இருப்பார். சினிமாவில் காமெடி காட்சிகளில் வந்தாலும் சொந்த வாழ்வில் இவருக்கு எல்லாம் டிராஜடிதான். காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ரஜினி திமிராகக் கேட்ட கேள்வி… பாலசந்தர் சொன்ன பதில்… அன்று எடுத்த முடிவு தான் இன்று வரை பாடம்!
ஆனால், இவரின் மீது பல புகார்களை சொல்லி அவரின் மனைவி நித்யா இவரை விட்டு பிரிந்தார். மதுப்பழக்கம் உள்ள பாலாஜி குடித்துவிட்டு தன்னை சித்தரவதை செய்வதாக புகார் சொன்னார். ஆனால், நித்யா மீது வேறு புகாரை சொன்னார் பாலாஜி. பாலாஜி மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் தாடி பாலாஜி. அப்போது அவருக்கு பல அறிவுரைகளை சொல்லி மனைவி நித்யாவுடன் சேர்த்து வைத்தார் கமல்ஹாசன். இனிமேல் ஒழுங்காக இருக்கிறேன் என சொல்லி சென்ற தாடி பாலாஜி மீண்டும் மனைவியுடன் பிரச்சனை செய்து அவரை பிரிந்தார்.
தற்போது தனிமையில் வசித்து வரும் அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தாவெக மாநாட்டு விழுப்புரத்தில் நடந்தபோது அதிலும் கலந்து கொண்டார். விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் கொடி நாட்டியவர் சிவகார்த்திகேயன்.
அவரை பற்றி சமீபத்தில் பேசிய பாலாஜி ‘பலரும் வாழ்க்கையில் மேலே போனால் பழசை மறந்துவிடுவார்கள். ஆனால், நான் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் அடித்த பன்ச் வசனத்தை கவனிச்சி இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்து பாராட்டுவார் சிவகார்த்திகேயன். இவ்வளவு வருடங்களாக சினிமாவில் இருக்கேன். ஆனா, இப்படி ஒருத்தர நான் பார்த்ததே இல்லை. இந்த ஒரு காரணத்திற்காகவே என்னோட ஆயுளை சிவாவுக்கு கொடுத்து அவர் நல்லா இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்’ என உருகியிருக்கிறார்.