செந்திலே நடிக்கும் போது இவர் இல்லாமலா?.. ‘லால்சலாம்’ படத்தில் ரஜினியுடன் கூட்டணி சேரும் மற்றுமொரு காமெடி நடிகர்!..
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பது
அனைவருக்கும் தெரியும். தனுஷ் நடித்த மூணு என்ற படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்போது நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்தில் ரஜினி ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். அவர் நடிக்கிறார் என்பது தெரிந்த பிறகே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. எப்போதுமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் என்றாலே வேல்ராஜ் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார்.
இப்போது வேல்ராஜின் உறவினர் தான் லால்சலாம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறாராம். அவரே தான் கதை , திரைக்கதையும் எழுதியிருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடப்பதாக தகவல்கள் வெளியானது. அதனால் அங்கு உள்ள மக்கள் ரஜினி எப்படியும் வருவார் என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் மும்பையில் படமாக்கப்படுவதாக கூறுகிறார்கள்.இந்த நிலையில் ரஜினியுடன் நீண்ட நாள்களுக்கு பிறகு நடிகர் செந்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. அவர்கள் இருவரின் காம்போவில் படையப்பா படம் தான் கடைசியாக வந்த படம்.
அதற்கு அடுத்தப்படியாக லால்சலாம் படம் தான் இவர்கள் இணையும் படமாக அமையப்போகிறது. இதில் கூடுதலாக ரஜினியுடன் தம்பி ராமையாவும் நடிக்கபோகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தம்பி ராமையா
சினிமா துறையில் நீண்ட நாள்களாக இருக்கும் கலைஞர் ஆனாலும் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்க வில்லை என்பது தான் ஆச்சரியமான தகவலாக உள்ளது.