சினிமாவே பார்த்து பயந்த நடிகை பானுமதி!.. அவருக்கு ஜோடியாக நடித்த நகைச்சுவை நடிகர் யாருனு தெரியுமா?..
சினிமாவில் ஒரு மகுடம் சூட்டிய ராணியாகவே வாழ்ந்தார் நடிகை பானுமதி. நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம் என பன்முகத் திறமைகள் வாய்க்கப்பெற்றவராக விளங்கினார் நடிகை பானுமதி. அந்த காலத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.
மேலும் முடிசூடா மன்னர்களாக வாழ்ந்த சின்னப்பா, பாகவதர் , எம்ஜிஆர், சிவாஜி என அனைத்து பிரம்மாண்டங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் பானுமதி. மேலும் இவரை பார்த்து நடிகர்களே சிலர் பயந்து போகிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. சினிமாவில் கெத்தாக இருந்த ஒரே நடிகை பானுமதி தான்.
இதையும் படிங்க :தான் மட்டும் நல்லா இருந்தா போதும்!.. தேசிய விருது கொடுத்த தயாரிப்பாளரை வேதனையில் சிக்க வைத்த விக்ரம்..
இவரிடம் சகஜமாக யாரும் போய் பழகிவிட முடியாது. தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமாவிலும் கோலோச்சிய நடிகையாக திகழ்ந்தார். அவருக்கு இன்னொரு சிறப்பு என்னவெனில் அவர் நடிக்கும் எல்லா படங்களுக்கு யாரும் பின்னனி பாடியது இல்லை. அவரே தான் பாடுவார்.
தெலுங்கிலும் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படி தமிழ், தெலுங்கில் பானுமதிக்கு ஜோடியாக மாபெரும் நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஒரு நகைச்சுவை நடிகர் நடித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், அவர் தான் நடிகர் தங்கவேலு. தன்னுடைய வாழ்க்கையை நகைச்சுவை நடிகராக தொடங்கிய தங்கவேலு முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் ‘ரம்பையின் காதலன்’ என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் நடிகை பானுமதி.
தங்கவேலுவுக்கு ஹீரோவுக்குரிய அந்தஸ்தான வசீகரமான தோற்றமும் அழகும் இருந்ததனால் தான் இவரும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஏன் கூட நடிக்கும் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக வரும் நாயகிகளை காதலிக்கும் கதாபாத்திரங்களும் இவருக்கு ஈசியாக கிடைத்தது.