நச்சுனு நாலு கேள்வி!.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதில்கள்!.. காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் தங்கவேலு..
தமிழ் சினிமாவில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் கே.ஏ. தங்கவேலு. மிகவும் குறுகிய வயதில் 62 வயது மதிக்கத்தக்க வேடத்தில் அப்பாவாக நடித்து மிகவும் பிரபலமானார் தங்கவேலு.
குடும்ப சூழ்நிலை காரணமாக மிகச்சிறு வயதில் மாடு மேய்க்கும் தொழிலுக்கு போனவர். அதன் பின் நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நாடகத்துறையில் நுழைந்தார். தனக்கென தனி பாணியை வைத்து தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்தவர்.
கல்யாணப்பரிசு, திருடாதே, கைதி கண்ணாயிரம் போன்ற படங்களில் இவர் நடித்த காட்சிகளைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம். குறிப்பாக எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் நாகேஷுடனான காமெடி காட்சிகளில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார் தங்கவேலு.
இதையும் படிங்க : “என் பையன் ஒரு படம்தான் நடிப்பான்”… படத்தில் நடிக்க அனுமதி கொடுத்த பிரபல நடிகரின் தந்தை… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
50களில் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் தங்கவேலுவின் காமெடி என்றால் சக்கை போடு போடும். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த காலங்களில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே வலம் வந்தார் தங்கவேலு. காலம் கடந்தும் அவரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் சினிமாவிற்கு அவர் அர்ப்பணித்த செயல்கள்..
இந்த நிலையில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த நகைச்சுவை மிக்க பதில்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த கேள்வி பதில்கள்.
1.உங்களுக்கு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: சரியா இருக்கானு எண்ணிப் பார்ப்பேன்.
2.கலைவாணருக்கும் இப்போது உள்ள சிரிப்பு நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: கலைவாணர் மறைந்து விட்டார், இப்போது உள்ள நடிகர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்
3.மனிதன் எப்போது தத்துவம் பேசுகிறான்?
பதில்: மப்பில் இருக்கும் போது, மசால் தோசைக்கு காசு இல்லாத போது
4.கஷ்டம் வரும் போது கடவுளை நினைப்பதை பற்றி?
பதில்: கடவுளுக்கு ஒரு கஷ்டம் வராததால் தான் ஒரு போதும் அவன் நம்மை நினைப்பது இல்லை போலிருக்கிறது.