இயக்குனர் சொன்ன அந்த வார்த்தை! கதறி அழுத தங்கவேல்.. படப்பிடிப்பில் நடந்த ரகளை!
1950 முதல் 1970 வரை தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் தங்கவேலு. நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர். இவரை டணால் தங்கவேலு என அழைப்பார்கள்.
எம்.ஜி.ஆர், தங்கவேலு, என்.எஸ்.கிருஷ்ணன், பாலையா ஆகியோர் ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர் தங்கவேலு. இருவரும் நாடகங்களில் நடிக்கும்போதே நண்பர்களாக இருந்தவர்கள். அதனால், எம்.ஜி.ஆர் துவக்கத்தில் நடித்த படங்களிலெல்லாம் தங்கவேலுவும் நடித்தார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமான திரைப்படம் சதிலீலாவதி. இந்த படம் 1936ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சிறிய வேடம் கிடைத்தது. அவரோடு என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பாலையா ஆகியோரும் நடித்திருந்தனர்.
படப்பிடிப்பிற்கு தினமும் தங்கவேலு வந்தாலும் அவரின் காட்சியை இயக்குனர் எடுக்கவில்லை. ஒருநாள் தங்கவேலுவிடம் வந்த இயக்குனர் ‘உன்னை இன்னக்கு ஷூட் செய்ய போகிறோம்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணனிடம் சென்று ‘அண்ணே!. இன்னைக்கு என்ன சுடப்போறாங்களாமே’ என சொல்லி கதறி அழுதுள்ளார்.
அதைக்கேட்ட தங்கவேலு ‘அட முட்டாப்பயலே. நீ எடுக்குற காட்சியை இன்னைக்கு எடுக்க போறாங்க.. அததான் இயக்குனர் உன்னிடம் கூறியுள்ளார்’ என சொல்ல தங்கவேலுவும் அவரோடு சேர்ந்து சிரித்தாராம்.
நடிகர் தங்கவேலு பல வருடங்கள் தனது மென்மையான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.