அதிக சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கவேலு!...

by Rohini |   ( Updated:2023-12-03 10:11:42  )
thanga
X

thanga

Actor Thangavelu: நாடக மேடையில் இருந்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகர் தங்கவேலு. எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார்.எம்.ஜி.ஆர் சினிமாவில் நுழைந்த போதே தங்கவேலுவும் அவருடன் காமெடியனாக நுழைந்தார்.

எம்ஜிஆரை ராமச்சந்திரா என அழைக்கும் சில பேரில் தங்கவேலுவும் ஒருவர். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்தவர். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இதையும் படிங்க: டென்சன் பண்ணாதீங்க பாஸ்!. வெற்றிமாறனை கடுப்பாக்கிய ஹரிஸ் கல்யாண்!.. வட போச்சே!.

நடிகர்களில் முதலில் லட்சத்தை சம்பளமாக பெற்ற முதல் நடிகையாக கே.பி.சுந்தராம்பாள் அறியப்பட்டார். அதே போல் நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபுதான் முதலில் லட்ச ரூபாயாக சம்பளம் பெற்றார் என ஒரு செய்தி வெளியானது.

ஆனால் அவருக்கு முன்பாகவே முதலில் லட்ச ரூபாயை சம்பளமாக பெற்றவர் நடிகர் தங்கவேலு என காரைக்குடி நாராயணன் என்ற இயக்குனர் சித்ரா லட்சுமணனிடம் கூறினாராம். அவர் ஒரு படத்திற்காக தங்கவேலுவை ஒப்பந்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார்.

அப்போது அவரிடம் கதை எல்லாம் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு சம்பளத்தை பற்றி பேசியிருக்கிறார் காரைக்குடி நாராயணன். அதற்கு தங்கவேலு ‘இதற்கு முன்பு நடித்த படத்தில் என்ன சம்பளம் வாங்கியிருந்தேனோ அதை வைத்து கொடுங்கள்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…

அதற்கு காரைக்குடி நாராயணன் ‘எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள்?’ எனக் கேட்க அதற்கு தங்கவேலு கடைசியாக பாக்கியவதி படத்தில் ஒரு லட்சம் சம்பளமாக பெற்றேன் என சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் காரைக்குடி நாராயணனுக்கு ஒரே அதிர்ச்சியாம்.

ஏனெனில் காரைக்குடி நாராயணன் கொடுக்க நினைத்த சம்பளமோ 5000. இவர் ஒரு லட்சம் என சொன்னதும் என்ன செய்வதென்று திகைத்தாராம் காரைக்குடி நாராயணன். இருந்தாலும் தங்கவேலு ‘நீங்க நினைத்த சம்பளத்தை கூறுங்கள்’ என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: என்னவேணுனாலும் சொல்லுங்கப்பா! இதுல நான்தான் கிங் – ரஜினியை விட மாஸ் காட்டிய விஜய்

காரைக்குடி நாராயணன் சம்பளத்தை சொன்னதும் வாயடைத்து போனாராம் தங்கவேலு. உடனே தன் மனைவியான சரோஜாவை அழைத்து இந்த விஷயத்தை கூறினாராம். அவரும் இந்த சம்பள தொகையை கேட்டதும் ‘இவர் நடிப்புக்கு வெறும் 5000 ரூபாய்தானா?’ என்று கேட்டாராம். இருந்தாலும் அந்த 5 ஆயிரம் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்தாராம் தங்கவேலு.

Next Story