More
Categories: Cinema History Cinema News latest news

உச்சம் தொட்ட தங்கவேலு.. ஒரு நடிகையின் மோகத்தால் சீரழிந்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் அந்த காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகராக இருந்தவர் தங்கவேலு. 10 வயது முதல் நாடகங்களில் நடிக்க தொடங்கிய தங்கவேலு எதார்த்தம் பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபல நகைச்சுவை நடிகராக மாறினார்.

ஏற்கனவே நடிகர் என் எஸ் கிருஷ்ணனும் தங்கவேலும் நல்ல நண்பர்கள் ஆனதால் கலைவாணர் புதிதாக தொடங்கிய தனது நாடகக் குழுவுக்கு தங்கவேலுவை இழுத்துக் கொண்டார். என் எஸ் கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் இணைந்தார்கள். தங்கவேலு முதன் முதலில் நடித்த படம் சதிலீலாவதி.

Advertising
Advertising

ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த தங்கவேலு தனது திருமணத்தைக் கூட மிக எளிமையாக நடத்தினார் . தனது மனைவியான ராசாமணி என்பவரை வெரும் மஞ்சள் கயிறோடு கோயிலில் வைத்து தாலிக்கட்டி நேராக கலைவாணரிடம் அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது வரை படம் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையையே அனுபவித்து வந்த தங்கவேலு அந்த சமயத்தில் தான் என் எஸ் கிருஷ்ணன் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.

அதிலிருந்து தங்கவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. என் எஸ் கிருஷ்ணன் இல்லாத குறையை தங்கவேலு தன் படங்களின் மூலம் தீர்த்து வைத்தார். அதிலும் குறிப்பாக பானுமதிக்கு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார் தங்கவேலு. அதிலிருந்து ஏகப்பட்ட படங்களில் நடிக்க தொடங்கிய தங்கவேலுவிற்கு செல்வங்கள் வந்து குவிந்தன. பல வீடுகள் எல்லாம் வாங்கத் தொடங்கினார். சொத்துக்கள் குவிய தொடங்கின.

என் எஸ் கிருஷ்ணனுக்கு ஜோடியாக மதுரம் நடித்து அந்த ஜோடி எப்படி பிரபலமானதோ அதேபோல தங்கவேலு மற்றும் சரோஜா ஜோடி மிகவும் பிரபலமானது இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றனர்.

ஒரு கட்டத்தில் தங்கவேலு வீட்டிற்கே வராமலேயே சரோஜா வீட்டில் தங்கி 24 மணி நேரமும் இருந்து அங்கிருந்து ஷூட்டிங்கிற்கு செல்வாராம். இது அவருடைய மனைவி ராசாமணிக்கு தெரிய வர ராசாமணிக்கும் தங்கவேலுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாம். இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் தொடர இருவருக்கும் வாய் தகராறு அதிகமாக ஏற்பட்டதாம். ஒரு நேரத்தில் தகாத வார்த்தையால் ராசா மணியை தங்கவேலு பேச கோபித்துக் கொண்டு தங்கவேலுவை விட்டு ராசாமணி அவரது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டாராம். ஆனால் அவர் அண்ணன் வீட்டுக்கு தான் சென்றிருக்கிறார் என்ற விஷயம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்த தங்கவேலுவிற்கு ராசா மணியின் மரணச் செய்திதான் வந்ததாம்.

அதிலிருந்தே தங்கம் வேலூர் மிகவும் உடைந்து போக வயதுக்கு வந்த இரு மகள்களை கட்டிக் கொடுக்க தன்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று இரு மகள்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் தங்கவேலு இந்த சுவாரசிய செய்தியை நமக்காக கூறியவர் பிரபல கதை ஆசிரியரும் இயக்குனருமான கலைஞானம்.

Published by
Rohini

Recent Posts