Cinema History
சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.
நாடகங்களில் நடித்துவிட்டு அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தேங்காய் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்து பிரபலமானதால் அவரின் பெயரின் முன்பு தேங்காய் சேர்ந்துகொண்டது. ஒரு விரல் என்கிற திரைப்படத்தில்தான் அவர் அறிமுகமானார்.
அதன்பின் பல திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்தார். பொதுவாக ஒரு சிலரை தவிர எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜி படங்களில் நடிக்க மாட்டார்கள். அதேபோல், சிவாஜி படங்களிலில் நடிக்கும் நடிகர்கள் எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்கமாட்டார்கள்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் சொல்லியும் கேட்காமல் படம் தயாரித்த தேங்காய் சீனிவாசன் – விதி யாரை விட்டது?
ஆனால், தேங்காய் சீனிவாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி என பல ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார் எனில் அது அவரின் அணுகுமுறைதான் காரணம். எல்லோரிடமும் நயமாக பேசி அவர் மீது கோபமே வராதபடி பார்த்துக்கொள்வார். சினிமாவில் பிசியாக நடித்தபோதும் ஒருபக்கம் நாடகங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை.
அப்படி கவிஞரும், பாடலாசிரியருமான வாலி எழுதிய ஸ்ரீ கிருஷ்ண விஜயம் நாடகத்தில் நடித்தார் தேங்காய் சீனிவாசன். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருந்தது. எந்த சபாவில் இந்த நாடகம் போட்டாலும் ஹவுஸ்புல் ஆகிவிடுமாம். இந்த நாடகத்தை படமாக்க சிலர் முயன்றனர்.
இதையும் படிங்க: கோவணம் கட்டிக்கிட்டு மசால் வடை சாப்பிடுவார்!… தேங்காய் சீனிவாசன் பற்றி யாரும் அறியாத சீக்ரெட்!..
இறுதியில், கிருஷ்ணன் – பஞ்சு இப்படத்தை தயாரித்து இயக்கினர். இப்படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவர்கள் ஆசைப்பட்டனர். ஆனால், தேங்காய் சீனிவாசன் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். எனவே, அவர்தான் அந்த படத்தில் நடிக்கவேண்டும் என சிவாஜியே சொல்லிவிட்டார். அதன்பின் ‘கலியுக கண்ணன்’ என்கிற பெயரில் இந்த படம் உருவானது. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சிவாஜி அப்படி சொன்னது பற்றி ஒருமுறை பேசிய தேங்காய் சீனிவாசன் ‘சிவாஜி மிகச்சிறந்த நடிகர். அவரே என்னை பாராட்டியதை மறக்கவே மாட்டேன். அப்படி சொல்ல எந்த நடிகருக்கும் மனசு வராது’ என உருக்கமாக சொன்னர்.
இதையும் படிங்க: இந்த நடிகருக்காக திருப்பதி வரை நடந்தே சென்ற தேங்காய் சீனிவாசன்!.. என்ன ஒரு நட்பு பாருங்க?..